ஸ்மார்ட்போனை வாரியணைத்துக் கொண்டால் யாருக்குமே நல்லது அல்ல.! தலையணையைப் போல மொபைல்போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், குறிப்பாக தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்கும் நபரா நீங்கள்?. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல்போன்களை நம்முடன் வைத்து உறங்கினால் புற்றுநோய் வருமா?.  இந்த கேள்விக்கான பதில் ?. ஆனால் எலிகளின் மீது மொபைல் கதிவீச்சை வெளிப்படுத்தி நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட ஆம் என்ற பதில் வந்துள்ளது.


புற்றுநோய்களுக்கான வாய்ப்பு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அது மனிதர்களுக்கு சாத்தியமா என்பது பற்றிய தெளிவில்லை. ஸ்மார்ட்போனை சற்று ஓரங்ங்கட்டிவிட்டு தூங்கினால் என்ன ஆகிவிடப்போகிறது?. 


மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  மொபைல்போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷனானது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல்போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பொது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் உமிழவில்லை நெருப்பையும் தன்னுள் கொண்டுள்ளதென்பதை நீங்கள் உணரவேண்டும். பேட்டரி சிக்கல்கள் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில்  தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் பின்னர் ஏற்படும் தீமைகளை நீங்களே அறிவீர்கள்.  


முதலில் கூறியபடி, ஸ்மார்ட்போன்கள் நமது உறக்க சுழற்சியையே மாற்றியமைத்து விட்டது. இரவு என்பது ஓய்வு எடுக்கும் நேரம், அதை நிகழ்த்தாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வு குறைந்து பாதிப்பும் ஏற்படும். தூக்கமின்மைக்கு முதல் மருந்தே ஸ்மார்ட்போனை ஓரங்கட்டுவது.