மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்பு வியாழக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டது.  688,888 டாலருக்கு Non-Fungible Token (NFT) வடிவத்தில் விற்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. சுயமாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருட்களின் உரிமையையும் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க யாரையும் அனுமதிக்கும் ஒரு லெட்ஜரில் பிளாக்செயினில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் படைப்புகளான என்.எஃப்.டி கள் சமீபத்தில் மிகவும் அதிகமான தொகைக்கு விற்பனையாகின்றன. இந்த மாதத்தில் ஒரு கலைப்படைப்பு கிட்டத்தட்ட 70 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது.



2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சோபியா, 31 வயதான இத்தாலிய டிஜிட்டல் கலைஞரான ஆண்ட்ரியா போனசெட்டோவுடன் இணைந்து தனது கலை படைப்பை உருவாக்கியுள்ளது. வண்ணமயமான கலை படைப்புகளை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஆண்ட்ரியா, டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் போன்ற பிரபலமானவர்களின் உருவங்களை கலைப்படைப்பாக வ்டித்துள்ளார்.


Also Read | 450 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்: அளவைக் கண்டு அசந்து போவீர்கள்


ரோபோ சோபியாவின் படைப்புகள், கலை வரலாறு மற்றும் பல்வேறு தளங்களில், அதனுடைய சொந்த இயற்பியல் தன்மை அல்லது ஓவியங்கள் ஆகியவற்றின் கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் படைப்பை, "பரிணாம வளர்ச்சியின் சுழல்கள்" என்று விவரிக்கிறார் ரோபோ சோபியாவை படைத்த படைப்பாளி டேவிட் ஹான்சன்.


"சோபியா இன்ஸ்டான்டியேஷன்" (Sophia Instantiation) என்ற தலைப்பில் சோபியாவின் டிஜிட்டல் படைப்பு, 12 வினாடிகள் கொண்ட  MP4 file கோப்பாகும், இது சோனியாவின் டிஜிட்டல் ஓவியத்தில் போனசெட்டோவின் (Bonaceto) உருவப்படத்தின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.


Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR