Car Sales In November 2024: அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார், பைக் போன்ற வாகனங்களின் விற்பனை அதிகமாக இருந்தது. காரணம், அக்டோபரில் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் அதிகம் இருந்தது. மேலும், மூகூர்த்த தினங்களும்அதிகம் இருந்தன. ஆனால், அதற்கு நேர்மாறாக கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த மாதத்தை விட குறைவான வாகனங்கள் விற்பனையாகியிருந்தாலும் கடந்தாண்டு நவம்பரை ஒப்பிடும்போது கடந்த 2024 நவம்பரில் கார்கள் அதிகமாகவே விற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதத்தில் எத்தனை கார்கள் மொத்தம் விற்பனை ஆகியுள்ளன. அதில் எந்தெந்த மாடல் கார்கள் விற்பனையில் டாப் 5 இடத்தை பிடிக்கிறது. கடந்த 2023 நவம்பரை ஒப்பிடும்போது எந்தெந்த கார்கள் அதிகம் விற்றுள்ளன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம். அதற்கு முன்பு, கடந்த 2023 நவம்பரில் 1,34,254 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு நவம்பரில் 1,48,882 கார்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது, கடந்தாண்டை விட இந்தாண்டு 14 ஆயிரத்து 628 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. அதாவது, வருடாந்திர வளர்ச்சி 10.90% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


5. Maruti Ertiga


இந்தாண்டு நவம்பரில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியின் Ertiga மாடல் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு 15 ஆயிரத்து 150 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 12 ஆயிரத்து 857 கார்களும் விற்பனையாகி உள்ளன. அதாவது, வருடாந்திர வளர்ச்சி 17.83 ஆக இருந்துள்ளது.


மேலும் படிக்க | ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது?


4. Tata Nexon 


டாடா நிறுவனத்தின் Nexon மாடல்தான் அதிக விற்பனையான கார்களின் டாப் 5 பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் 15,329 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 14,916 கார்களும் விற்பனை ஆகியுள்ளன. இதில் EV மாடலும் அடக்கம். கடந்தாண்டு விட இந்தாண்டு வெறும் 413 கார்களே அதிகமாக விற்றுள்ளது. இதன் வருடாந்திர வளர்ச்சியும் 2.77% ஆக உள்ளது. 


3. Tata Punch


டாடா நிறுவனத்தின் Punch மாடல் இந்தாண்டு நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்களஇல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் 15,435 கார்களும், இந்தாண்டு 14,383 கார்களும் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டு விட 1,052 கார்கள் அதிகம் விற்றுள்ளது. இதிலும் EV மாடலும் அடக்கம். இதன் வருடாந்திர வளர்ச்சி 7.31% ஆக உள்ளது. 


2. Hyundai Creta


ஹூண்டாய் நிறுவனத்தின் Creta கார்தான் இந்த நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்களின் பட்டியில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் 11,814 கார்களே விற்பனையான நிலையில், இந்தாண்டு நவம்பரில் 15 ஆயிரத்து 432 கார்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது சுமார் 3,638 கார்கள் கடந்தாண்டு விட அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதாவது இந்த காரின் வருடாந்திர வளர்ச்சி 30.79% ஆக உள்ளது. 


1. Maruti Baleno


2024 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக விற்பனையான கார் என்றால் அது மாருதி சுசுகி நிறுவனத்தின் Baleno மாடல்தான். இந்தாண்டு நவம்பரில் 16,293 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 12,961 கார்களும் விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்தாண்டை விட இந்தாண்டு 3,332 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. அதாவது இதன் வருடாந்திர வளர்ச்சி 25.71% ஆக உள்ளது.  


மேலும் படிக்க | Google Pixel 8a, iPhone 15: அதிரடி தள்ளுபடியுடன் இன்றுமுதல் பிளிப்கார்டின் புதிய சேல்... முந்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ