சலான்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களால் பிரச்சனையா? இந்தச் செயலியை உங்கள் மொபைலில் விரைவாகப் பதிவிறக்கினால் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், அவற்றை மீறுவது உங்களுக்கு அதிக விலை கொடுக்கலாம். வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத்துறையில் இருந்து கிடக்கும் சலான்களுக்கு அபராதம் கட்டுவது ஒரு சுமை என்றால், அதற்காக நீதிமன்றத்திற்கு அலைவது மிகப் பெரிய சுமையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பிரச்சனையை சுலபமாய் தீர்த்து வைக்க செயலிகள் இருக்கின்றன. அதில் சிறந்த இரண்டு செயலிகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டு பயன்பெறுங்கள்.


போக்குவரத்து விதிமீறல்கள்


சில போக்குவரத்து விதிமீறலுக்கு சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஆனால் போக்குவரத்து விதிகளை கவனிக்காமல், போக்குவரத்து போலீசாரிடம் பேசி ‘சரி செய்துக் கொள்ளலாம்’ என நினைக்கும் பலர் உள்ளனர். ஆனால் சலான் அவர்களின் வீட்டை அடையும் போது குழப்பம் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | இங்கிலாந்து ராஜ மகுடத்தில் இனி கோஹினூர் வைரத்துக்கு இடமில்லை!


சிசிடிவி கேமராக்கள்


அதிலும் தற்போது சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் இருப்பதால், யாரும் இல்லாத இடத்தில் செய்யும் தவறுகளுக்கும் வீடு தேடி சலான் வந்துவிடுகிறது. எல்லா இடங்களிலும் ஸ்பீட் கேமராக்கள் நிறுவப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் ஆன்லைன் சலான் கழிக்கப்பட்டு அது உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும்.


சிக்கலான நீதிமன்ற நடைமுறை


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சலான்களை நிரப்புவதும் சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளை எதிர்கொள்வதும் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு செயலிகள் வந்துவிட்டன. இந்த செயலிகள் கேமராக்கள், டிவைடர்கள் மற்றும் சிவப்பு விளக்குகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்கும்.இந்த ஆப்ஸ் எவை என்பதையும் அவற்றின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி பலனடையுங்கள்.


மேலும் படிக்க | திருமலை திருப்பதி தரிசனம்... ஏப்ரல், மே டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா?


Waze செயலி


இது இரட்டை செயல்பாட்டு செயலியாகும், இது வரைபடமாகவும் வேகக் கண்டறிதலாகவும் செயல்படுகிறது. இதன் மூலம், கேமரா வருவதற்கு முன்பே அதன் அறிவிப்பைப் பெறுவீர்கள். இதனுடன், சாலைத் தடைகள் மற்றும் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் ஆப் உங்களுக்கு வழங்கும். இதை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


ரேடார்போட் ஆப்


இந்த செயலியில், வேக கேமராக்கள் மற்றும் வழிசெலுத்தல் ஆகிய இரண்டையும் பற்றிய தகவல்களைப் பெறலாம். இதன் மூலம் ஸ்பீட் டிடெக்டர் கேமராக்கள், சாலைத் தடுப்புகள் மற்றும் போக்குவரத்து பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள். இதனுடன் வேக வரம்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம்.


மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ