பேஸ்புக் தகவல்கள் கசிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரால், பேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டது. இதனால், பலரும் தகவல் மற்றவர்களால் திருட்டப்பட்டிருக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவல் கசிந்திருந்தால், அதனை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல் கசிவுக்கு காரணம்


மார்க் ஜூக்கர்பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் கூட கசிந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த அப்டேட்டுகளை செய்யாமல் விட்டதால் ஏற்பட்டதன் விளைவு ஆகும். இதனை இலக்காக கொண்டு ஹேக்கர்கள் தங்கள் விளையாட்டுகளை அரங்கேற்றுகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை திருடிக் கொண்டு, பல மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றனர். 


மேலும் படிக்க | இந்த தொகைக்கு மேல் இனி ட்ரான்ஸாக்ஷன் செய்யாதீங்க! வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரலாம்!


ஏற்கனவே பேஸ்புக்கில் இருந்து கசிந்த தகவலில் நம்முடைய தகவலும் இருக்கலாம் என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உங்கள் தரவு கசிந்தவர்களின் பட்டியலில் இருக்கிறதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் HaveIBeenPwned.com க்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் கசிந்ததா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். 


 Facebook இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Enter-ஐ அழுத்தவும். இணையதளம் ‘Oh no —pwned!’ என்ற முடிவைக் கொடுத்தால், உங்கள் தனிப்பட்ட தரவு இணையத்தில் உள்ளது என்று அர்த்தம்.


நீங்கள் என்ன செய்ய வேண்டும்?


நீங்கள் உடனடியாக உங்கள் Facebook கடவுச்சொல்லை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடன் பதிவுசெய்யப்பட்ட பிற சேவைகளின் கடவுச்சொல்லையும் மாற்ற வேண்டும். உங்கள் தரவு மற்றும் கணக்கை சிறப்பாகப் பாதுகாக்க, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் சேவைகளில் Two Step Verification -ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். 


நீங்கள் எப்போதும் லிங்குகள் மற்றும் ஃபிஷிங் மின்னஞ்சல்கள் அல்லது SMS/WhatsApp குறித்து விழிப்புடன் இருக்கவும். பேஸ்புக்கில் இருக்கும் எண், வங்கி உள்ளிட்ட பிற சேவைகளுக்கு நீங்கள் கொடுத்திருந்தால் அதனை மாற்றுவது நல்லது. பேஸ்புக்கிற்கு ஒரு தொலைபேசி எண்ணும், வங்கி நிதிபரிமாற்ற சேவைகளுக்கு தனி எண்ணையும் பயன்படுத்துவது, இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். 


மேலும் படிக்க | மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ