மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் 100 மின்னணு சார்ஜிங் நிலையங்கள்...
உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் 100-க்கும் மேற்பட்ட மின்னணு சார்ஜிங் நிலையங்களை உருவாக்க எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (Energy Efficiency Services Limited-EESL) புதிய ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (Noida) ஒப்பந்தம் செய்துள்ளது.
உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் 100-க்கும் மேற்பட்ட மின்னணு சார்ஜிங் நிலையங்களை உருவாக்க எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (Energy Efficiency Services Limited-EESL) புதிய ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (Noida) ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் நொய்டா ஆணையத்தின் பொது மேலாளர் ஏ.கே. தியாகி மற்றும் EESL நிர்வாக இயக்குநர் அமித் கௌசிக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
READ | 5 ரூபாய்காக நடந்த கொலை முயற்சி... மாம்பழம் விற்பவர் மீது துப்பாக்கி சூடு..!!!
இந்த ஒப்பந்தத்தின் கீழ், EESL சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் துணை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவும் எனவும், சார்ஜிங் நிலையத்தினை அமைக்க நிலத்தை நொய்டா ஆணையம் வழங்கும் எனவும் நோய்டா ஆணையம் தெரிவித்துள்ளது.
நொய்டாவில் பல்வேறு இடங்களில் மின்னணு சார்ஜிங் நிலையங்களை திறப்பது, மக்களை மின்சார வாகனங்களை இயக்குவதற்கு ஊக்குவிக்கும் என நோய்டா ஆணையம் நம்புகிறது. இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் ஆண்டுதோறும் ஒரு காருக்கு கார்பன் வெளியேற்றம் 3.7 டன் குறையும் எனவும் நோய்டா ஆணையம் நம்புகிறது.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் மோடி அரசின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 162 பொது EV (மின்சார வாகனம்) சார்ஜிங் நிலையங்களை நொய்டா ஆணையத்திற்கு அமைக்க கனரகத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
நொய்டா நகரில் பொது சார்ஜிங் நிலையம் அமைக்கும் பொறுப்பை EESL பெற்றுள்ளது. EESL இதுவரை 20 EV சார்ஜிங் நிலையங்களை பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளது, இதில் 13 சார்ஜிங் நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 7 நிலையங்களும் விரைவில் தொடங்கப்படும் என்று EESL கூறுகிறது.
Fem -2 திட்டத்தின் கீழ், நாட்டின் 62 முக்கிய நகரங்களில் 2,600 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியில் EESL செயல்பட்டு வருகிறது.
READ | வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...
மொத்தம் ரூ.10,000 கோடி பட்ஜெட்டுடன் இந்த திட்டம் 2019 ஏப்ரல் 1 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டது. நாட்டில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விரைவான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக Fem இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டில் மின்சார மற்றும் கலப்பின வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். இதற்காக, மின்சார வாகனங்கள் வாங்குவதில் ஆரம்ப கட்டத்தில் சலுகைகளை வழங்குவதற்கும் மின்சார வாகனங்களை விநியோகிப்பதற்கும், மக்கள் ஒரு அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதாகும்.