விமானப் பயணம் என்பது பலருக்கும் கனவாக இருக்கும் இன்றைய சூழலில், அந்த கனவுகள் கண்முன்னே நனவாகப்போகும் காலங்கள் விரைவில் வர இருக்கின்றன. சாலைப் பயணங்களைப் போலவே ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு காற்றிலும் பறந்து செல்ல இருக்கிறோம். ஏற்கனவே விமானம் இருக்கிறபோது, புதியதாக அடுத்த என்ன? என கேட்கிறீர்களா?. ஆம், விமானப் பயணத்தின் அடுத்த வெர்சனாக வருகிறது ஏர் டாக்ஸி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அலெக்ஸ்சா, வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் - மத்திய அரசு எச்சரிக்கை!


இந்த ஏர் டாக்ஸி பயணங்கள் சிங்கப்பூரில் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் அடுத்த 2 ஆண்டுகளில் ஏர் டாக்ஸி சேவை தொடங்கும். பிரபலமான நகரங்களான மரினா பே மற்றும் சென்டோசா நகரங்களில் 10 முதல் 20 விமான டாக்ஸிகள் முதன் முதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வோலோகாப்டர் என்ற நிறுவனம் ஏர் டாக்ஸி சேவையை வழங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ள வோலோகாப்டர், அடுத்தகட்டமாக ஆசிய நாடுகளுக்கும் ஏர் டாக்சிஸி சேவையை விரிவாக்கம் செய்வதை இலக்காக கொண்டுள்ளது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?


இதுகுறித்து முதற்கட்டமாக நகரப் பகுதிகளின் அமைப்பு, தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுகளை வோலோகாப்டர் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில், " அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏர் டாக்சி சேவையை சிங்கப்பூரில் தொடங்குகிறோம். முதலில் மரினா பே உள்ளிட்ட நகரங்களில் தொடங்கும் தங்கள் நிறுவனத்தின் சேவை, அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம். இதன் மூலம் தொலைதூர பயண சேவைக்கான நேரம் வெகுவாக குறையும்" எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஏர்டாக்ஸிக்கு தேவையான லைசென்ஸ் அனுமதியை வோலோகாப்டர் நிறுவனம் இன்னும் பெறவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR