வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யும்போது ஒரே ஸ்டைலில் எழுத்துக்களை அனுப்பாமல் பல்வேறு ஸ்டைலில் எழுத்துக்களை மாற்றி அனுப்பலாம்.  

Written by - ZEE Bureau | Last Updated : Feb 18, 2022, 02:32 PM IST
  • மாறுபட்டதாக வித்தியாசமான ஸ்டைலில் மெசஜ் அனுப்ப பலரும் விரும்புவார்கள்.
  • வாட்ஸப்பில் சில டெக்னிக் முலம் எழுத்துக்களை மாற்ற முடியும்.
வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் தற்போது பிரபலமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது, நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.  அதில் பலருக்கும் ஒரே விதமான ஸ்டைலில் மெசேஜ்களை அனுபவத்தில் அவ்வளவாக விருப்பமாக இருக்காது.  சற்று மாறுபட்டதாக வித்தியாசமான ஸ்டைலில் மெசஜ் அனுப்ப பலரும் விரும்புவார்கள், அவ்வாறு பல ஸ்டைல்களில் மெசேஜ் அனுப்புவது பார்ப்பவர்களையும் கவரும் விதமாக அமைகிறது.

மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப்பில் சாட் செய்யாமலேயே வாய்ஸ் மெசேஜை கேக்கலாம்!

தற்போது வாட்ஸ்அப்பில் விதவிதமான ஸ்டைல்களில் எப்படி மெசேஜ் செய்யலாம் என்பதை காணலாம்.  நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் மெசேஜை தேர்ந்தெடுத்து அதனை சிறிது அழுத்திப் பிடிக்கவும், பின்னர் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.  இதனை செய்தவுடன் நீங்கள் விரும்பும் போல்ட், இட்டாலிக், ஸ்ட்ரைக்த்ரூ மற்றும் மோனோஸ்பேஸ் போன்ற ஆப்ஷன்கள் வரும் அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.  இந்த வழியில் நீங்கள் செய்ய விரும்பவில்லை என்றால் வேறொரு மாற்று வழியுள்ளது, அதனை பின்பற்றி எழுத்துக்களை மாற்றலாம்.

whastapp

வாட்ஸ்அப்பில் மெசேஜை இட்டாலிக் ஸ்டைலில் மெசேஜின் இருபுறமும் அடிக்கோடினைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டு _ text_.  அதனை தொடர்ந்து மெசேஜை போல்ட் ஸ்டைலில் மாற்ற, மெசேஜிங் இருபுறமும் நட்சத்திரக் குறியைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டு text .  ஸ்ட்ரைக்த்ரூ ஸ்டைலுக்கு மாற்ற மெசேஜிங்  இருபுறமும் ஒரு டில்டைச் சேர்க்கவும்.  இதுவே நீங்கள் ஐபோன் பயனாளராக இருந்தால், டைப் செய்த மெசேஜை அழுத்தி பிடித்து பின்னர் BIU என்பதைக் கிளிக் செய்யவும்.  பின்னர் அதில் போல்ட், இட்டாலிக், ​​ஸ்ட்ரைக்த்ரூ போன்ற ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கவும்.  டைப்ரைட்டர் ஸ்டைலுக்கு எழுத்துக்களை மாற்ற மெசேஜிற்கு இருபக்கமும் அபோஸ்ட்ரோபிகளைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டு "'text"'.

how to change font style on whatsapp follow easy steps | WhatsApp पर फॉन्ट  स्टाइल को ऐसे कर सकते हैं चेंज, बेहद आसान है तरीका
 
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு நபரின் சாட்டிற்கும் தனித்தனியான பேக்ரவுண்ட் வால்பேப்பரை வைத்துக்கொள்ளலாம்.  இதனை செய்ய வாட்ஸ்அப் சாட்டை திறந்து திரையின் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் க்ளிக் செய்து அதில் வால்பேப்பர் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.  பின்னர் அதில் பிரைட், டார்க், சாலிட் கலர்ஸ் மாறும் மை போட்டோஸ் ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.  அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து பேக்ரவுண்டு வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம்.  இதே முறையை பின்பற்றி ஒவ்வொருவரின் சாட்டிற்கும் வால்பேப்பரை தேர்வு செய்துகொள்ளலாம்.

whastapp

மேலும் படிக்க | ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு Whats app பயன்படுத்துவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News