பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், அனைவரும் எலக்ட்ரிக் ஆப்ஷன்களின் பக்கம் திரும்புகின்றனர். மின்சார வாகனங்களே எதிர்காலமாக இருப்பதால், ஸ்கூட்டர் மற்றும் எலக்டிரிக் கார்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால், விலை. கார் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் எண்ணுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!


கார்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும், சாதாரண இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலக்டிரிக் இருசக்கர வாகனங்கள் விலை வாங்க கூடிய அளவிலேயே இருக்கின்றன. 10 முதல் 30 ஆயிரம் ரூபாய் அதிகம் செலுத்தினால் எலக்டிரிக் ஸ்கூட்டர்களை நீங்கள் வாங்கிவிட முடியும். தற்போதைய சூழலில் எலக்டிரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.1 லட்சம். ஒரே தவணையில் செலுத்தி அந்த வாகனத்தை வாங்க முடியாதவர்கள் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம். 



குறிப்பாக, ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 பிளஸ் மற்றும் ஏதர் 450 எக்ஸ் என்ற இரு ஸ்க்கூடர்களையும் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ள முடியும். உங்களின் பட்ஜெட்டிற்கும் ஏதவாக இருக்கும் இந்த ஸ்கூட்டர்கள், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம். 


இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. Ather 450X ஆனது 6000W மோட்டார் உடன் 2.9kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. பேட்டரி சார்ஜிங்கைப் பொறுத்தவரை, சாதாரண சார்ஜரில் 0-80 சதவீதம் வெறும் 35 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.31 லட்சம். முன்பணமாக 10 ஆயிரம் செலுத்தி இந்த ஸ்கூட்டர்களை வாங்கிக் கொள்ளும் நீங்கள், மாதந்தோறும் இஎம்ஐ கட்டணமாக 4360 ரூபாய் 36 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பாதுகாப்பான 5 இந்திய கார்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR