Humble One: சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!
மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் நுழையும் அதே வேலையில், சர்வதேச சந்தையில் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.
Humble One: சோலார் பவர்ட் மின்சார கார்களின் எண்ட்ரி
மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் நுழையும் அதே வேலையில், சர்வதேச சந்தையில் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. மின்சார கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்கள் தேவை. இவை உடனடியாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. சார்ஜிங் உள்கட்டமைப்பு முழுமையாக மேன்மையடையாவிட்டால், மின்சார கார்களை ஓட்டுவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மின்சார கார்களில் சூரிய சக்தி சார்ஜிங்
இதை மனதில் வைத்து, சில மின்சார கார் (Electric Car) உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார கார்களில் சோலார் சார்ஜிங் அம்சத்தைச் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக கார் ஓட்டுனர்கள் கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் ஸ்டேஷன்களைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. உலகின் இரண்டு சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றுக்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் இவற்றை சாலைகளில் காண முடியும்.
காரில் சோலார் பேனல்
இந்த கார் (Car) சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்படுகிறது. காரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 1000 மைல்கள் அல்லது சுமார் 1,600 கிலோமீட்டர் வரை இவற்றை இயக்க முடியும். Aptera Paradigm-க்காக நிறுவனம் ப்ரீ ஆர்டர் சேலைத் துவக்கியது. அதில் இந்த கார் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக விற்கப்பட்டது.
ALSO READ: Okaya Electric Scooter 'Freedum': ரூ. 69,999 அசத்தல் விலையில் அபார அம்சங்கள்
ஹம்பிள் ஒன்னின் சிறந்த அம்சங்கள்
ஹம்பிள் ஒன் சோலார் கூரை, மின்சாரம் தயாரிக்கும் பக்க விளக்குகள், பியர்-டு-பியர் சார்ஜிங், மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மற்றும் ஃபோல்ட் அவுட் சோலார் அரே விங்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றின் உதவியுடன், எஸ்யூவியின் பேட்டரி எளிதில் சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும்.
எஸ்யூவி ஹம்பிள் ஒன்
Aptera Paradigm-ஐப் போலவே, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹம்பிள் மோட்டார்ஸ் எஸ்யூவி ஹம்பிள் ஒன்னை வடிவமைத்துள்ளது. இந்த காரும் சூரிய சக்தியால் (Solar Energy) இயக்கப்படுகிறது. இந்த காரின் கூரை உட்பட பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி இந்த கார் பேட்டரியை சார்ஜ் செய்கிறது.
ALSO READ: Cheap and Best Electric Cycles: இ-பைக்குகளுக்கு செம போட்டி அளிக்கும் சூப்பர் சைக்கிள்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR