ட்விட்டரில் ப்ளூ டிக் பெற $8 கட்டணம்.. எலான் மஸ்க் அதிரடி!
Elon Musk announces Blue tick Charges: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 (ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது. எலோன் மஸ்க் புளூ டிக் வைத்திருக்கும் மக்கள், பிற கணக்குகளை வைத்திருப்பவர்களை விட நம்பகத் தன்மை அதிகம் உள்ளவர்கள் என்பதை உணர்த்துகிறது எனக் கூறிய அவர், பணம் செலுத்துவதன் இந்த நன்மையை பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் இது குறித்து பதிவு செய்த ட்வீட்டில், சம்பந்தப்பட்ட நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதன் பலன்கள் என்ன என்பதையும் எலோன் மஸ்க் கூறினார். மேலும், “டிவிட்டரில், ‘ஸ்பேம் மற்றும் ஸ்கேமை’ நீக்குவது மிகவும் முக்கியம். மேலும் பதில் அளிப்பதிலும், தேடலில் பயனர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மேலும் மேலும் இதில் அளவில் பெரிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பகிர முடியும். இது தவிர, விளம்பரங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும்” என எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரை வாங்கிய எலோன் மஸ்க் இப்போது பாஸில் இருந்து 'பிக் பாஸ்' ஆகிவிட்டார் எனலாம். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோரை பணிநீக்கம் செய்து ஆரம்பத்திலேயே அதிரடிகளை நிகழ்த்ஹி வருகிறாஅர். மேலும், மஸ்க் கையகப்படுத்திய பிறகு ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவையும் கலைத்துள்ளார்.
மேலும் படிக்க | ₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!
திங்களன்று US செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) தாக்கல் செய்த தகவலின் படி, எலோன் மஸ்க் ட்விட்டரின் ஒரே இயக்குநராக ஆனார் என்று CNN தெரிவித்துள்ளது. ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் சேருவதற்குப் பதிலாக, எலோன் மஸ்க் இப்போது அதன் ஒரே மாற்றாக இருக்கிறார் என்பதை இது நிரூபிக்கிறது.
SEC தாக்கல் செய்தபடி, "நிறுவன இணைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, இணைப்பிற்கு முன்பு ட்விட்டரின் இயக்குநர்களாக இருந்தவர்கள் இப்போது இல்லை." இதில் பிரட் டெய்லர், பராக் அகர்வால், ஓமிட் கோர்டெஸ்தானி, டேவிட் ரோசன்ப்ளாட், மார்த்தா லேன் ஃபாக்ஸ், பேட்ரிக் பிச்செட், எகான் டர்பன், ஃபை-ஃபீ லீ மற்றும் மிமி அல்மாயே ஆகியோர் அடங்குவர்.
கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக மஸ்க் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார்.
மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?
மேலும் படிக்க | ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ