₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருந்த எலான் மஸ்க், அதில் தன்னிடம் இருக்கும் பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2022, 03:44 PM IST
  • மஸ்க் தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்.
  • டெஸ்லாவின் சில பங்குகளை வைத்து பெற்ற கடனில் இருந்து சுமார் 12.5 பில்லியன் டாலர்களை திரட்டினார்.
  • மீதமுள்ள பணத்தை திரட்ட, அவர் முதலீட்டு நிதியையும் பயன்படுத்தினார்.
₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்! title=

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் இப்போது எலோன் மஸ்க்கிற்கு சொந்தமாகிவிட்டது. கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்தவுடன், எலோன் மஸ்க் அதன் மறுசீரமைப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளை அவர் பணியில் இருந்து நீக்கியுள்ளார். எலோன் மஸ்க் ட்விட்டரை சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியுள்ளார் . இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. எலோன் மஸ்க் தனது தனிப்பட்ட சொத்துக்கள், முதலீட்டு நிதிகள் மற்றும் வங்கிக் கடன்கள் ஆகியவற்றின் மூல ட்விட்டர் கையகப்படுத்துதலுக்கான பணத்தை செலுத்த முன்வந்துள்ளார். பலகோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு மஸ்க் எப்படி பணம் ஏற்பாடு செய்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான பணம் தனிப்பட்ட பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டது!

இந்த $44 பில்லியன் ஒப்பந்தத்திற்கு பணம் செலுத்தும் போது, எலான் ​​மஸ்க் தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார். அவர் தனது கார் நிறுவனமான டெஸ்லாவின் சில பங்குகளை வைத்து பெற்ற கடனில் இருந்து சுமார் 12.5 பில்லியன் டாலர்களை திரட்டினார். மீதித் தொகையை பணமாக கொடுக்க திட்டம் தீட்டினார். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு சுற்றுகளில் சுமார் $15.5 பில்லியன் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றார்.

மேலும் படிக்க | கூண்டை விட்டு பறந்த பறவை... டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க்!

முதலீட்டு நிதி

இப்போது இந்த ஒப்பந்தத்திற்கான மீதமுள்ள பணத்தை திரட்ட, அவர் முதலீட்டு நிதியையும் பயன்படுத்தினார். இதில் முதலீட்டு குழுக்கள் மற்றும் பிற வணிகர்கள் செய்துள்ள முதலீடுகள் அடங்கும். மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் இணை நிறுவனர் லாரி எலிசன் இந்த ஒப்பந்தத்திற்காக ட்விட்டரில் $1 பில்லியன் முதலீடு செய்துள்ளார். இது தவிர, கத்தார் முதலீட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கத்தாரின் இறையாண்மை செல்வ நிதியான கத்தார் ஹோல்டிங்கும் இதில் சிறிதளவு முதலீடு செய்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் தலாலும் இதில் முதலீடு செய்துள்ளார். 

கடன் மூலம் திரட்டப்பட்ட நிதி

மீதமுள்ள பணத்தை திரட்ட எலோன் மஸ்க் கடன் வாங்கியுள்ளார். வங்கி மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து சுமார் 13 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளார். கடன் வழங்கிய நிறுவனங்களில் மோர்கன் ஸ்டான்லி, பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஜப்பானிய வங்கிகளான மிட்சுபிஷி யுஎஃப்ஜே நிதிக் குழு மற்றும் மிசுஹோ, பார்க்லேஸ் மற்றும் பிரெஞ்சு வங்கிகளான சொசைட்டி ஜெனரல் மற்றும் பிஎன்பி பரிபாஸ் ஆகியவை அடங்கும். இதில் மோர்கன் ஸ்டான்லி சுமார் 3.5 பில்லியன் டாலர் கடனாக கொடுத்துள்ளதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடன்களுக்கு ட்விட்டர் உத்தரவாதம் அளிக்கிறது.

மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?

மேலும் படிக்க | ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News