சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி
எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக புதிய ஏஐ உருவாக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கூகுள் நிறுவனம் இதில் ஏற்கனவே களத்தில் குதித்துவிட்ட நிலையில், எலான் மஸ்க் இப்போது தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி டெக் உலகை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதன் வருகைக்குப் பின்னர் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிஸ்னஸ் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நொடியில் அனைத்து தகவல்களையும் கொடுத்துவிடும் சாட்ஜிபிடி, கூகுள் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் இது குறித்து கவலை கொள்ளாத கூகுள் நிறுவனம், சாட்ஜிபிடிக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து ஆடிப்போனது.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...
உடனடியாக சாட்ஜிபிடிக்கு போட்டியாக புதிய ஏஐ உருவாகத்தில் ஒரு அணியை களமிறக்கியது. அத்துடன் கூகுள் பார்டு என பெயரிட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு டெக் உலகில் சாட்ஜிபிடியின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படப்போகும் மாற்றத்தையும் அதிர்வலைகளையும் உணர்த்த தொடங்கியது. ஏனென்றால் அது கூகுளின் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சுந்தர் பிச்சை அறிந்திருந்தார். அவரைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இப்போது புதிய சாட்ஜிபிடி ஏஐ உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது உலகை ஆட்டிப்படைக்கும் ஓபன் ஏஐ உருவாக்கத்தில் ஏற்கனவே இருந்தவர் எலான் மஸ்க். 2018 ஆம் ஆண்டு அந்த தொழில்நுட்ப உருவாக்க குழுவில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது அதற்கு போட்டியாக ஏஐ உருவாக்க திட்டமிட்டிருக்கும் அவர், ஆராய்ச்சியாளர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். கூகுள் ஓபன் ஏஐ டீமில் இருந்து வெளியேறிய பாபுஷ்கின் என்ற டெக் நிபுணருடன் தனியாக சந்திப்பு நடத்தியுள்ளார்.
இதில் சாட்ஜிபிடியால் என்னென்ன செய்ய முடியும், அதற்கு மாற்றாக புதிய ஏஐ உருவாக்கம் குறித்த விரிவாக கலந்துரையாடியுள்ளார். ஆனால், இந்த திட்டம் இப்போது பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. விரைவில் எலான் மஸ்க் தன்னுடைய ஏஐ உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவும் வாய்ப்பு இருப்பதாக டெக் உலகினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Chat GPT: சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்
மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ