நானாவது உளவு பார்ப்பதாவது? அதற்கு பதில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று விடுவேன்: சீனாவிற்கு Elon musk பதிலடி
டெஸ்லா இன்க் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் சனிக்கிழமையன்று, தனது நிறுவன கார்களை யாராவது உளவு பார்க்க பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என்று கூறினார்.
டெஸ்லா இன்க் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் சனிக்கிழமையன்று, தனது நிறுவன கார்களை யாராவது உளவு பார்க்க பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என்று கூறினார். ”உளவு பார்த்து தொழில் செய்வதை விட, நான் என் நிறுவனத்தை மூடி விடுவதை மேலாகக் கருதுவேன்” என்று எலன் மஸ்க் கூறினார். சீனாவின் இராணுவம் டெஸ்லாஸை தடை செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி தெரிவித்தார்.
"எந்தவொரு தகவலையும் நாங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்” என்று மஸ்க் வர்சுவல் சந்திப்பில் கலந்துரையாடிய போது ஒரு சீன மன்றத்தின் முன் கூறினார். சீனாவிலோ அல்லது வேறு எங்குமோ, தன்னுடைய நிறுவன கார்கள் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டால், தனது நிறுவனம் மூடப்படும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
வாகனங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் குறித்த பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி, சீன இராணுவம் டெஸ்லா கார்களை அதன் வளாகங்களுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
உயர்மட்ட சீன (China) மற்றும் அமெரிக்க தூதாண்மை அதிகாரிகள் அலாஸ்காவில் நடத்திய ஒரு சர்ச்சைக்குரிய சந்திப்பின் போது, இந்த கட்டுப்பாடுகள் வெளிவந்தன. ஜனவரியில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு நடக்கும் இவ்வகையிலான முதல் சந்திப்பாகும் இது.
ALSO READ: 5G Internet: முகேஷ் அம்பானியின் வழியை Elon Musk தடுப்பாரா?
உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் அதிக பரஸ்பர நம்பிக்கை இருக்க வெண்டும் என்று மஸ்க் வலியுறுத்தினார். மாநில கவுன்சிலின் கீழ் ஒரு அறக்கட்டளையால் நடத்தப்படும் சீனா மேம்பாட்டு மன்றத்தில் நடந்த ஒரு உயர்மட்ட வர்த்தக கூட்டத்தில் அவர் அளித்த உரையில் எலன் மஸ்க் (Elon Musk) இவ்வாறு கூறினார்.
குவாண்டம் இயற்பியலில் நிபுணத்துவம் பெற்ற சீன விஞ்ஞானி சூ கிகுனுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சூ கிகுன் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார் சந்தையும், மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) முக்கிய சந்தையுமான சீனாவில், டெஸ்லா கடந்த ஆண்டு 147,445 வாகனங்களை விற்பனை செய்தது. இருப்பினும், இந்த ஆண்டு சீன நிறுவனங்களான நியோ இன்க், ஜீலி போன்றவற்றிலிருந்து அதிக போட்டியை எதிர்கொள்கிறது.
ALSO READ: Elon Musk-ன் Starlink broadband சேவையை இந்தியாவில் ப்ரீ புக் செய்யலாம்: இதுதான் விலை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR