Elon Musk ஒரே நாளில் உலக பணக்காரர் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட காரணம் என்ன ..!!

அமெரிக்க பத்திரங்கள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சிறிது குறைந்துள்ளது. அதிக வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2021, 01:50 PM IST
  • அமெரிக்க பத்திரங்கள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சிறிது குறைந்துள்ளது.
  • அதிக வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • அதனால், பங்குகளின் விலைகள் சரிந்துள்ளன.
Elon Musk ஒரே நாளில்  உலக பணக்காரர் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட காரணம் என்ன ..!! title=

டெஸ்லா (Tesla) நிறுவன பங்குகள் மதிப்பு சரிந்ததை அடுத்து, அதன் நிறுவனர் எலோன் மஸ்க் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் குறைந்து விட்டது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில். அவரது சொத்து 169 பில்லியன் டாலராக உள்ளது. அமேசானின் ஜெஃப் பெசோஸுக்குப் (Jeff Bezos) பிறகு மஸ்க் இப்போது உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார், அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு 178 பில்லியன் டாலர். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு (Bloomberg Billionaires Index) என்பது உலகின் பணக்காரர்களின் தினசரி தரவரிசை ஆகும்.

அமெரிக்க பத்திரங்கள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சிறிது குறைந்துள்ளது. அதிக வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், பங்குகளின் விலைகள் சரிந்துள்ளன.  ஆப்பிள் நிறுவனத்தின்பங்குகள் 3.4%, மைக்ரோசாப்ட் 2.7%, டெஸ்லா 6.9%  என்ற அளவிற்கு சரிந்தன.

ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டில் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள மஸ்க் மற்றும் பெசோஸ் போராடி வருகின்றனர்.  ஜனவரி மாதத்தில், டெஸ்லாவின் சொத்துக்கள் மதிப்பு 210 பில்லியன் டாலர்களை எட்டியது. பின்னர் அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் ஏற்ற இறக்கம் கண்டதை அடுத்து. அவர் முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு  என மாறி மாறி இடம் பிடித்து வந்தார்.

இன்றுவரை எலன் மஸ்க், டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (Space X), ஹைப்பர்லூப், ஓபன்ஏஐ, நியூரலிங்க், தி போரிங் கம்பெனி, ஜிப் 2, பேபால் ஆகிய எட்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.

ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர் உள்ளனர். 

எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் டெஸ்லா சமீபத்தில் அதன் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு ஒரு புதிய பட்டம் அளித்துள்ளது, அதாவது டெக்னோக்கிங் (Technoking). மேலும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சாக் கிர்கார்ன் இப்போது "Master of Coin" என்று அழைக்கப்படுவார். புதிய பட்டங்கள் மூலம் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்படுமா என்று நிறுவனம் எதுவும் கூறவில்லை.

ALSO READ | உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க் ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News