அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலக மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலான் மஸ்கின் (Elon Musk) இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பால்கன் ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. 


பால்கன் 9 என்னும் அந்த ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்மால்சாச் ரைட்ஷேர் ப்ரோகிராம் என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்டது.


இந்நிலையில், ஒரு உள்ளூர் ஊடக நிறுவனமான தி வெர்ஜ், ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship rocket)  சோதனை ஏவுதலின் போது ,பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Aviation Administration) அமைப்பின் பரிசோதனைக்கான உரிமத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ள அந்த ஊடக நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் பரிசோதனையின் போது, ​​Federal Aviation Administration (FAA) நிறுவனத்தின் ஏவுதள உரிமத்தின் விதிமுறைகளை மீறியதாக கூறியது.


வெற்றிகரமான சோதனை ஏவுதலுக்குப் பிறகு தரையிறங்க முயற்சிக்கும் போது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்தது.


ஸ்பேஸ்எக்ஸின் புதிதாக உருவாக்கப்பட்ட ராப்டார் என்ஜின்களைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் 41,000 அடி உயரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இருப்பினும், எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான நிறுவனம், ராக்கெட் அந்த உயரத்தை அடைய எட்டியதா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.


"ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க ஸ்பேஸ்எக்ஸ் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திருப்தி அடைந்த பின்னரே நாங்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம்" என்று FAA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய அமெரிக்க மாணவர்..! 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR