எலன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. ஸ்டார்லிங்க் என்ற நிறுவனம் இந்தியாவில் மிக வேகமான இணைய சேவையை வழங்கும். இது குறித்த செய்திகள் ஏற்கனவே வந்துள்ளன. ஆனால் இப்போது ஸ்டார்லிங்க் பிராட்பேண்டை (Starlink Broadband) பயனர்கள் இந்தியாவில் முன்பதிவு செய்ய முடியும் என்ற செய்தி வந்துள்ளது.  நிறுவனம் பிராட்பேண்ட்டை ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கச் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வளவு செலவாகும்


Starlink-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Starlink Broadband-ஐ முன்கூட்டியே ஆர்டர் செய்ய (pre order) அதை லைவ் செய்யப்பட்டுள்ளது. இதன் வணிக ரீதியான அறிமுகம் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் இருக்கும். Starlink Broadband-ஐ இந்தியாவில் 99 டாலர் அதாவது 7,300 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ப்ரீ-ஆர்டருக்கு முன்பதிவு செய்யலாம்.


ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்


எந்த சர்கிள்களில் இந்த சேவை வழங்கப்படுகிறதோ, அந்த எண்களையுடைய பயனர்களுக்கு மட்டுமே Starlink Broadband சேவை கிடைக்கும். உங்கள் பகுதி சர்கிளில் வரவில்லை என்றாலும், உங்கள் ப்ரீ-புக்கிங் உறுதிபடுத்தப்படும். ஆனால், அதன்பிறகு நீங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.


Starlink Broadband-ன் செயலியை நீங்கள் Google Play Store மற்றும் Apple iOS ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கலாம். அது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் இங்கே பெறுவீர்கள்.


ALSO READ: மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகிறது Elon Musk-ன் SpaceX


Jio Fiber மற்றும் Airtel Xtream ஆகியவற்றுடன் Starlink Broadband-ன் போட்டி இருக்கும்


Starlink Broadband இந்தியாவுக்கு வந்தபிறகு, அதன் போட்டி Jio Fiber மற்றும் Airtel Xtream ஆகியவற்றுடன் இருக்கும். இந்த போட்டியின் முக்கிய அம்சம் Starlink Broadband-ன் சந்தா கட்டணமாக இருக்கும். எலன் மஸ்கின் இந்த முயற்சி இந்தியாவில் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இது தவிர, எலன் மஸ்க் (Elon Musk) தலைமையிலான டெஸ்லா பெங்களூரில் ஒரு துணை நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி ஆலை மற்றும் ஆர் அண்ட் டி பிரிவை உருவாக்கத் தயாராகி வருகிறது.


டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் தனது அணியின் ஒரு பகுதியாக வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய மூன்று இயக்குநர்களை நியமித்துள்ளது.


இது ஒரு தனியார் அன்லிஸ்டட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 15,00,000 ரூபாயையும் கட்டண மூலதனமாக 1,00,000 ரூபாயையும் கொண்டுள்ளது.


ALSO READ: 5G Internet: முகேஷ் அம்பானியின் வழியை Elon Musk தடுப்பாரா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR