கூகுளிடம் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்: நீக்குவதற்கான வழிமுறை
மொபைல் போன் இருந்தால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கூகுளிடம் நிச்சயம் இருக்கும். அதனை நீக்கிக் கொள்ள முடியும்
கூகுளிடம் உங்களைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன. நீங்கள் அதை உணராமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் Search Box-ல் சில வார்த்தைகளைத் டைப் செய்யும்போது உங்களைப் பற்றியும் உங்கள் தேடலைப் பற்றியும், நிறைய தகவல்களை Google பதிவு செய்கிறது. நீங்கள் தேடுவதற்கு Google-ஐப் பயன்படுத்தும் போது, அது இந்த தகவலை எல்லாம் சேகரிக்கிறது:
* நீங்கள் என்ன தேடுகிறீர்கள்
* எந்தெந்த இணையதளங்களை பார்வையிட்டுள்ளீர்கள்
* நீங்கள் பார்த்த வீடியோக்கள்
* நீங்கள் கிளிக் செய்த அல்லது பார்த்த விளம்பரங்கள்
* உங்கள் தற்போதைய இருப்பிடம்
* சாதனம் பற்றிய தகவல்
* குக்கீ தரவு மற்றும் ஐபி முகவரி
இந்தத் தகவல் உங்களையும், உங்கள் சாதனத்தையும் தனித்துவமாக அடையாளம் காணும் குக்கீயில் சேமிக்கப்பட்டு, Google இன் டேட்டா சென்டரில் சேமிக்கப்பட்டுள்ள உங்களின் சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுவிடும். இதன்மூலம் விளம்பரக் குறியீடுகளைக் கண்டறிந்து உங்களுக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். கூகுளும் இந்த தகவலை வைத்தே உங்களை அடையாளம் கண்டு கொள்ளும். எப்போது நீங்கள் இணையத்தை பயன்படுத்தும்போது உங்களைப் பற்றிய தகவலை கூகுள் தானாகவே எடுத்துக் கொள்ளும். இந்த தகவலை நீங்கள் நீக்க வேண்டும் என விரும்பினால் நீக்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆண்டு முழுவதும் ஹாட்ஸ்டார் Free! ஜியோவின் லேட்டஸ்ட் சூப்பர் பிளான்
தனிப்பட்ட தகவலை நீக்கிக் கொள்ளும் வழிமுறை
1. Google தேடல் Removal page-ல் (https://support.google.com/websearch/answer/9673730), requirements சரிபார்க்கவும்.
2. தேவையான அனைத்து தகவல்களையும் இருமுறை சரிபார்த்த பிறகு, டெலிட் புரோபஸை தொடங்கலாம்.
3. அனைத்து புரோசஸையும் நீங்கள் முடித்துவிட்டால், உங்கள் இமெயில் மூலம் கன்பர்மேசன் கேட்கப்படும். அதனை நீங்கள் சரியாக செய்யும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை ஏற்று, தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படும்.
மேலும் படிக்க | செல்போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கணுமா; சில சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ