மலிவு விலையில் iPhone 15... தள்ளுபடியுடன் அதிரடி எக்ஸ்சேஞ் ஆஃபர்... மிஸ் பண்ணக் கூடாத டீல்
Excellent Offers for Apple iPhone 15: உங்களுக்கும் ஐபோன் வாங்கும் கனவு இருந்தால், அதை நிறைவேற்ற மிக நல்ல சான்ஸ் இப்போது வந்திருக்கிறது. ஐபோன் 15 மாடல் போனை இப்போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் கீழ்மட்டம் வரை அனைத்து தரப்பிலான மக்களின் முக்கிய சாதனமாக மாறிவிட்டது. பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று.
உங்களுக்கும் ஐபோன் வாங்கும் கனவு இருந்தால், அதை நிறைவேற்ற மிக நல்ல சான்ஸ் இப்போது வந்திருக்கிறது. ஐபோன் 15 மாடல் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். டாடா குழுமத்தின் குரோமா கடைகளில் மலிவு விலையில் ஐபோன் 15 வாங்க நல்ல வாய்ப்பு. வங்கி ஆபர்களுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.
குரோமாவில் ஐபோன் 15 விலை விபரம் (iPhone 15 Price In Croma)
குரோமாவில் ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) ஸ்மார்ட்போனுக்கு, சுமார் 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 (128 ஜிபி சேமிப்பகம் கொண்ட கருப்பு நிற போன்) விலை ₹71,290. இந்த போனின் அறிமுக விலை ₹ 79,900 என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளும் உள்ளன. இதன் மூலம் நீங்கள் ஐபோன் ப்ரீமியம் ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கலாம்.
ஐபோன் 15 வாங்குகையில் வங்கி கார்டுகளுக்கு கிடைக்கும் சலுகை (iPhone 15 Bank Offer)
உங்கள் கனவு போனான iPhone 15 போனை வாங்க எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். இது தவிர எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் நீண்டநாட்களுக்கு ராக்கெட் வேகத்தில் வேலை செய்ய... சில டிப்ஸ்
ஐபோன் 15 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (iPhone 15 Exchange Offer)
ஐபோன் 15 வாங்குகையில் எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால் ரூ.60 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறலாம். ஐபோன் 14 போனை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் கொடுத்தால் சுமார் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். அதே சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடல் போனை கொடுத்தால், சுமார் ரூ.34 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். . ஃபோன் நல்ல நிலையில் இருக்கும்போதுதான் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதிக பட்சமாக ரூ.34 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் ரூ.4 ஆயிரம் வங்கி தள்ளுபடி பெறும் நிலையில், போனின் விலை ரூ.42 ஆயிரமாக இருக்கும்.
மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய... சில டிப்ஸ் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ