இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்யாவசிய பொருளாக மாறிப்போன ஸ்மார்ட்போன், உணவு உடை இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. போன் தயாரிப்பு நிறுவனங்களும், தொடர்ந்து புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அனைத்துமே, மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன், ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளது.
சிலருக்கு ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றும் தேவை ஏற்படலாம். ஸ்மார்ட்போன்கள், அதன் தரம் மற்றும் மாடலுக்கு ஏற்ப, இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் என்ற கால அளவில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்குக் காரணம் ரேம் அல்லது ஸ்டோரேஜ் பற்றாக்குறை. இதனால் ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை, எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளாத வகையில் சிறிது விலக்கி வைக்கவும். எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்கள் சாதனத்தை உள்ளிலிருந்து சேதப்படுத்தக் கூடும் என்பதால், இதில் கவனமாக இருப்பது நல்லது.
சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update)
உங்கள் போனின் சாஃப்ட்வேரை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளை அவ்வப்போது உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்வது அவசியம். இது போனின் ரேம் மற்றும் சேமிப்பகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதால், தொலைபேசி முன்னே விட வேகமாகவும், ஸ்மூத்தாகவும் இயங்கும். ரேம் மற்றும் சேமிப்பகத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கும்.
ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் முறை (Things To Remember While Charging Your Phone)
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதிலும் கவனம் தேவை. இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் பழக்கம் பலருக்கு இருக்கும் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதனால் போனின் பேட்டரி சேதம் அடைவதோடு, ஸ்மார்ட் போனின் செயல் திறனும் பாதிக்கப்படும். அதோடு எப்போதுமே 100% சார்ஜ் செய்வது சரியல்ல. என்பது சதவீதம் அல்லது 90 சதவீதம் சார்ஜ் ஆனவுடன் எடுத்து விட வேண்டும். அதேபோல போன் பேட்டரி சார்ஜ் 20 % என்ற அளவிற்கு கீழே போகாமல் சார்ஜ் செய்வது நல்லது.
சார்ஜ் செய்ய ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்தவும்
உங்கள் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜரை எப்போதும் பயன்படுத்தவும். தவறான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுளை பாதிக்கும். அதோடு, டூப்ளிகேட் சார்கஜர்களை பயன்படுத்துவதால், சில சமயங்களில் போன் சேதமடைந்து முஹலுக்கே மோசம் ஏற்படும் நிலையும் உண்டாகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ