தீபாவளி சமயத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் தீபாவளி விற்பனை சலுகைகள் பல முடிந்துவிட்டது. சிறப்பு விற்பனையின் போது பல பொருட்கள் மிகவும் மலிவாக விற்கப்பட்டன. மக்களும் இதனை பெரிதும் பயன்படுத்தினர். விற்பனையின் போது, ​​ஐபோன் 12 மிகவும் பிரபலமானது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12 தொலைபேசியை மக்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கினர். சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 மாடல்  24 ஆயிரம் ரூபாய் தள்ளுபயில் கிடைத்தது. தீபாவளி முடிந்துவிட்டது, ஆனால் iPhone 13 வாங்குவோருக்கு  தற்போதும் சலுமை உண்டு. ஆஃபர் முடிவதற்குள் ஐபோன் 13ஐ மிக மலிவாக வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Apple iPhone 13 சலுகை விலை


ஆப்பிள் ஐபோன் 13 இந்தியாவில் 128 ஜிபி அடிப்படை மாறுபாட்டிற்கு ரூ.79,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர் இந்தியா iStore iPhone 13 வாங்குவோருக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. ஐபோன் 13ஐ ரூ.55,900க்கு வாங்கலாம். ரூ.79,900 விலையில் ஐபோன் 13 மொபைலை வாங்க HDFC வங்கி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும். EMI மூலம் வாங்கினாலும் இந்த சலுகை கிடைக்கும். தள்ளுபடி பெறும்போது, ​​அதன் விலை ரூ.73,900 என்ற அளவில் இருக்கும்.


ALSO READ: Flipkart Diwali Sale: வெறும் ரூ. 500-க்கு கிடைக்கிறது அட்டகாசமான POCO ஸ்மார்ட்போன் 


Apple iPhone 13 இல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்


iPhone 13 வாங்கும் போது ரூ.18,000 கேஷ்பேக் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பழைய ஐபோனை மாற்றினால்,  இவ்வளவு தள்ளுபடி பெறலாம். பழைய iPhone XR 64GB போனுக்கு விலை ரூ.18,000 வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. பழைய போனுக்கு அதிக பட்ச விலை கிடைத்த நிலையில், புதிய போனின் விலை ரூ.55,900 ஆக இருக்கும்.


ஐபோன் 13  சிறப்பு அம்சங்கள்


iPhone 13  2532 x 1170 ரெசல்யூஷன் கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. முதன்மை கேமரா 12 மெகாபிக்சல்கள் மற்றும் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் உள்ளது


ஐபோன் 13 பேட்டரி மற்றும் கேமரா


ஐபோன் ஆப்பிளின் புதிய A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் iOS 15 ஆப்ரேஷன் ஸிஸ்டத்ட்தில் இயங்குகிறது. Apple iPhone 13 ஆனது 3,227mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது லைட்னிங் போர்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வழியாக 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஐபோன் 13 -ல் வீடியோக்களுக்கான போர்ட்ரெய்ட் மோட் (Cinematic mode - Portrait mode) உள்ளது  கனெக்டிவிட்டிக்கு ஃபோனில் GLONASS + QZSS, Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, Bluetooth 5.0, NFC மற்றும் GPS உடன் 5G உள்ளது.


ALSO READ: Jio Phone Next: Whatsapp மூலம் முன்பதிவு செய்வது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR