ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு செக் வைத்த அரசு! இனி இஷ்டத்துக்கு போட முடியாது
ஆன்லைனில் பொருட்களுக்கு இஸ்டதுக்கு ரிவ்யூ கொடுப்பதற்கு அரசு செக் வைத்துள்ளது.
அன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் என்றால், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதாவது, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் & ரேட்டிங்ஸ்களை தடுக்க புதிய விதிகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனி பதிவிட முடியாது.
புதிய விதிமுறைகள் என்ன.?
* தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார் ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) மூலம் கோடிட்டு காட்டப்பட்டுள்ள போலி ரேட்டிங்க்ஸை சரி பார்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன.
மேலும் படிக்க: இந்த 4 தவறுகளை செய்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்!
* BIS-ன் புதிய தரநிலையான IS 19000:2022, இ-மெயில் அட்ரஸ் மூலம் ரிவ்யூ கொடுப்பவரை சரிபார்த்தல், கால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அடையாளம் காணுதல், லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்துதல், கேப்ட்சா சிஸ்டமை ரிவ்யூ செய்பவரின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் முறைகளையும் வழங்குகிறது.
* தயாரிப்புகளை ரிவ்யூ செய்ய விரும்பும் யூஸர்கள் முதலில் தொடர்பு தகவலை வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
* பிளாட்ஃபார்ம்களில் வெளியிடப்படும் ரிவ்யூக்கள் பப்ளிஷிங் டேட் மற்றும் ரேட்டிங்ஸ்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
* புதிய விதிகளின்படி, யூஸர்கள் தங்கள் ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்தவுடன் அவற்றை திருத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்ய விரும்பும் யூஸர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் மற்றும் அவர்களின் கான்டாக்ட் இன்ஃபர்மேஷன்களை வழங்க வேண்டும்.
* ஏதேனும் வெப்சைட்ஸ் போலி ரிவ்யூஸ்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டால், அது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கருதி அபராதம் விதிக்கப்படும். Zomato, Swiggy, Tata Sons, Reliance Retail, Meta மற்றும் Amazon ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ