Oppo K10 விற்பனை: ஓப்போ சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஓப்போ கெ 10-ஐ அறிமுகப்படுத்தியது. இன்று அதாவது மார்ச் 29 முதல் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பிள்ப்கார்டிலிருந்து வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தொடங்கிய விற்பனையில்  ஓப்போ கெ 10-ஐ 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். ஓப்போ கெ 10 இல் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


Oppo K10 விற்பனை: பம்பர் தள்ளுபடியை எவ்வாறு பெறுவது?


ஓப்போ நிறுவனம்,  ஓப்போ கெ 10-ஐ ரூ.14,990 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப்கார்டிலிருந்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பல வங்கி சலுகைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஓப்போ கெ 10- ஐ வாங்கும் போது, ​​நீங்கள் பாங்க் ஆஃப் பரோடா அல்லது ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள்  ஓப்போ கெ 10- ஐ 13,990 ரூபாய்க்கு வாங்க முடியும். 


மேலும் படிக்க | iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி 


வாடிக்கையாளர்கள் எஸ்பிஐயின் டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பின்னர் இந்த போனை ரூ.12,990க்கு வாங்கலாம்.


ஓப்போ கெ 10 விற்பனை: இந்த வழியில் 2 ஆயிரத்துக்கும் குறைவாக வாங்கலாம்


பிளிப்கார்டின் இந்த டீலில், வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், 13 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால்,  ஓப்போ கெ 10-இன் விலை ரூ.1,990 ஆகக் குறையும். 


ஓப்போ கெ 10 விற்பனை: போனின் சிறப்பம்சங்கள் என்ன? 


இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில், 6ஜிபி RAM உடன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜும் கிடைக்கும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஓப்போ கெ10 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 6.59-இன்ச் முழு எச்டி+எல்சிடி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 


இதில், மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது. இதில் பிரதான 50எம்பி சென்சார் மற்றும் இரண்டு 2 எம்பி சென்சார்கள் உள்ளன. ஓப்போ கெ10-ல் செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் 16எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | வாட்ஸ் ஆப்க்கு வரும் மிரட்டல் அப்டேட்! - உற்சாகத்தில் பயனர்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR