அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்

Flipkart Offers: இந்த பதிவில் 5ஜி ஸ்மார்ட்போனான Poco M4 Pro 5G-இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம். பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 1,249 ரூபாய்க்கு வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2022, 05:26 PM IST
  • பிளிப்கார்டில் மலிவான விலையில் தொலைபேசியை வாங்கலாம்.
  • 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.1,249க்கு கிடைக்கிறது.
  • எக்ஸ்சேஞ் ஆஃபரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்  title=

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. பொதுவாக, பிளிப்கார்டில் பல விற்பனைகள் அதாவது சேல்கள் நடக்கும். 

எனினும் சேல் எதுவும் இல்லாதபோதும், பிளிப்கார்டில் பொருட்களை மலிவாக வாங்கலாம். இந்த பதிவில் நாம் 5ஜி ஸ்மார்ட்போனான போகோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G) இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம். பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 1,249 ரூபாய்க்கு வாங்கலாம். 

5ஜி ஸ்மார்ட்போன்களில் பம்பர் தள்ளுபடிகளைப் பெறுங்கள்

Poco M4 Pro 5G சந்தையில் ரூ.16,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை 11% தள்ளுபடிக்கு பிறகு 14,999 ரூபாய்க்கு வாங்க முடியும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் கொண்டு இந்த போனை வாங்கினால், 750 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை 14,249 ரூபாயாக குறையும். 

மேலும் படிக்க | ஜியோவின் அசத்தல் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும் 

இந்த வழியில் போனை 1,249 ரூபாய்க்கு வாங்கலாம் 

இந்த போனில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,249 க்கு வாங்கலாம்.  உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், 13 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனை வெறும் ரூ.1,249க்கு வாங்கலாம்.

Poco M4 Pro 5G அம்சங்கள்

போகோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. மீடியா டெக் டைமென்ஷன் 810 சிப்செட்டில் பணிபுரியும் இந்த ஃபோனில், 6.6 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 5,000mAh பேட்டரியுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பும்  உள்ளது. இந்த கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் சென்சார் மற்றும் 8எம்பி இரண்டாவது சென்சார் இருக்கும். இதில் உங்களுக்கு 16எம்பி முன் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TechTips: ஸ்மார்ட்போன் கவரால் குறையும் சிக்னல் வேகம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News