புதுடெல்லி: FAU-G க்கான காத்திருப்பு முடிவடைய உள்ளது. கடந்த பல மாதங்களாக, ஆன்லைன் விளையாட்டுகளின் ஆர்வலர்கள் FAU-G க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், மொபைல் கேம் பிரியர்களுக்கு முக்கியமான சில முக்கியமான தகவல்கள் வந்துள்ளன. FAU-G இன் புதிய புதுப்பிப்புகள் என்ன என்பதை இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எங்கள் கூட்டாளர் வலைத்தளமான bgr.in,  FAU-G ஜனவரி 26 அன்று தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டை இந்திய நிறுவனமான nCore Games தயாரித்துள்ளது. சமீபத்தில், நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மொபைல் விளையாட்டைப் பற்றி அறிவித்தார்.


இந்த விளையாட்டு முதலில் அக்டோபரில் தொடங்கப்பட்டவிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின்னர், இது 2020 நவம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று nCore கேம்ஸ் கூறியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது இந்த விளையாட்டின் லாஞ்ச் தேதி ஜனவரி 26 என கூறப்பட்டுள்ளது.


FAU-G என்றால் என்ன?


FAU-G என்பது Fearless and United Gaurds என்று பொருள்படும். அதாவது இது அச்சமற்ற மற்றும் ஒன்றிணைந்த வீரர்களின் விளையாட்டாகும். இந்த விளையாட்டு இந்திய நிறுவனமான nCore கேம்ஸ் உருவாக்கிய ஒரு அதிரடி விளையாட்டாகும். இந்த விளையாட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது (PUBG Mobile இன் தடைக்குப் பிறகு). இந்த விளையாட்டின் வருவாயில் 20 சதவீதம் 'பாரத் கே வீர்' அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று நடிகர் அக்‌ஷய் குமார் (Akshay Kumar) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


ALSO READ: PUBG Mobile India நாளை தொடங்கப்படுமா? உண்மை நிலை என்ன?


விளையாட்டு கால்வன் பள்ளத்தாக்கு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது


கடந்த ஆண்டு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே வன்முறை மோதல் நிலவிய கால்வன் (Galwan) பள்ளத்தாக்கை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டின் முதல் நிலை அல்லது முதல் கட்டம் இருக்கும் என்று என் கோர் விளையாட்டுகளின் இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்தார். இருப்பினும், இந்த விளையாட்டு PUBG மொபைலின் இந்திய மாற்றாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன.


PUBG ஒரு பேட்டில் ராயல் விளையாட்டாக இருந்தது. ​​FAU-G ஒரு அதிரடி ஆக்ஷன் விளையாட்டாகும்.


நீங்கள் எங்கு FAU-G பதிவிறக்கம் செய்யலாம்?


FAU-G செயலி பக்கம் கூகிள் பிளே ஸ்டோரில் (Google Playstore) 2020 நவம்பரிலேயே நேரலைக்கு வந்தது, அதாவது லைவ் ஆனது. இங்கிருந்து இதை ப்ரீ-ரெஜிஸ்டர் செய்யலாம். ப்ரீ-ரெஜிஸ்டர் செய்த பிறகு, பயனர்களுக்கு ஒரு புஷ்-நோடிஃபிகேஷன் கிடைக்கும். விளையாட்டு பதிவிறக்கத்திற்கு தயாராக உள்ளதா இல்லையா என்ற தகவலை இது உங்களுக்கு அளிக்கும். இந்த விளையாட்டு தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்படும்.


நீங்கள் முன்பே பதிவு செய்யவில்லை என்றால் அதை Google Play இலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டு துவக நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முன் பதிவுகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில், இந்த விளையாட்டின் முன் பதிவுகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.


ALSO READ: Missing Pub-G? கவலை வேண்டாம்! அக்ஷய் குமாருடன் அதிரடியாக களமிறங்கவுள்ளது Fau-G!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR