Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி
Flipkart Big Saving Days Sale: ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன் (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன் (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம், இரண்டு பிராண்டுகளும் வெவ்வேறு திரை அளவுகளில் மலிவான விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
Flipkart Sale: 6 ஆயிரத்துக்குள் ஸ்மார்ட் டிவிகள்
- Blaupunkt 24Sigma707: Flipkart விற்பனையில், Blaupunkt இன் 24Sigma707 ஸ்மார்ட் டிவி வெறும் 5,999 ரூபாய்க்கு கிடைக்கும். இது அதன் அசல் விலையான ரூ.6,499 ஐ விட ரூ.500 குறைவாகும்.
- Thomson 24Alpha001: இதேபோல், தாம்சனின் 24Alpha001 ஸ்மார்ட் டிவியும் ரூ.5,999க்கு கிடைக்கும். இது அதன் அசல் விலையான ரூ.6,499ஐ விட ரூ.500 குறைவாகும்.
மேலும் படிக்க | யூடியூப் சேனல்களின் கவனத்திற்கு “கிளிக்பைட் தலைப்பு” வீடியோக்களுக்கு தடை விதிப்பு!
Flipkart Sale: 4K ஸ்மார்ட் டிவிகளிலும் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன
வழக்கத்தை விட அட்வான்ஸ் அம்சங்களை விரும்புவோருக்கு, Blaupunkt 4K ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூ.22,499 முதல் தொடங்குகிறது. இந்த மாடல் ஆண்ட்ராய்டு டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. மேலும் இது 43-இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் ரெசல்யூஷன் தீர்மானம் UHD ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் Dolby Atmos, Dolby Vision மற்றும் DTS TruSurround போன்ற சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ தொழில்நுட்பங்களும் உள்ளன.
நிறுவனத்தின் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ரூ.27,999க்கும், 55 இன்ச் ஒன்று ரூ.31,999க்கும் கிடைக்கும். பெரிய திரையை விரும்பும் வாடிக்கையாளர்கள், 65 இன்ச் டிவி -ஐ ரூ.43,999 -க்கும், 75 இன்ச் டிவி -ஐ ரூ.72,999- க்கும் வாங்கலாம்.
மறுபுறம், தாம்சன் 4K ஸ்மார்ட் டிவிகளை ரூ.20,499 முதல் வழங்குகிறது. இவற்றில் 43, 50, 55, 65, மற்றும் 75 இன்ச் விருப்பங்கள் உள்ளன. 50 இன்ச் மாடல் ரூ.27,999க் -கும், 55 இன்ச் மாடல் ரூ.30,999 -கும், 65 இன்ச் மாடல் ரூ.44,999 -கும், 75 இன்ச் மாடல் ரூ.69,999 -கும் கிடைக்கும். தாம்சன் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளில் ரூ. 20,000 வரை பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இது மட்டுமின்றி, மேலும் ஒவ்வொரு 4K மாடலை வாங்கும்போதும் 25W சவுண்ட் பாரும் இலவசமாக கிடைக்கும்.
மேலும் படிக்க | Vivo X200 Series: இன்று முதல் தொடங்கும் விற்பனை.... விலை, விவரங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ