Vivo X200 Series: இன்று முதல் தொடங்கும் விற்பனை.... விலை, விவரங்கள் இதோ

Vivo X200 series: இப்போது வாடிக்கையாளர்கள் விவோவின் இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் (Amazon), Vivo இன் இணையதளம் மற்றும் கடைகளிலும் வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 19, 2024, 04:45 PM IST
  • விவோ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி.
  • புதிய டாப் மாடல் போன்களான Vivo X200 மற்றும் X200 Pro இன்று முதல் விற்பனை.
  • அமேசான், Vivo இன் இணையதளம் மற்றும் கடைகளிலும் வாங்கலாம்.
Vivo X200 Series: இன்று முதல் தொடங்கும் விற்பனை.... விலை, விவரங்கள் இதோ title=

Vivo X200 Series: விவோ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. விவோவின் புதிய டாப் மாடல் போன்களான Vivo X200 மற்றும் X200 Pro இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்கள் டிசம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. 

இப்போது வாடிக்கையாளர்கள் விவோவின் இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் (Amazon), Vivo இன் இணையதளம் மற்றும் கடைகளிலும் வாங்கலாம். இந்த போன்களின் விலை ரூ.65,999 முதல் தொடங்குகிறது. இந்த போன்கள் MediaTek சிப்செட் மற்றும் நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன.

Vivo X200 மற்றும் X200 Pro: இந்த போன்களின் விலை, சலுகைகள்

- Vivo X200 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.65,999 ஆகும்.
- Vivo X200 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.71,999.
- Vivo X200 Pro 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.94,999. 

இந்த போன்களை அமேசான் மற்றும் பிற இடங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கலாம். நிறுவனம் இதற்கு சில வங்கி சலுகைகளையும் வழங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த தொலைபேசிகள் இன்னும் மலிவான விலையில் கிடைக்கும்.

EMI வசதியும் கிடைக்கும்

இந்த போனை எளிதான EMI விருப்பத்துடனும் வாங்கலாம். 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.2750 செலுத்தி இந்த போனை வாடிக்கையாளர்கள் சுலபமாக வாங்கலாம். சில வங்கிகளில் இதற்கு 10% வரை கேஷ்பேக் கிடைக்கும். இதில் வாடிக்கையாளர்கள் ஒரு வருட கூடுதல் உத்தரவாதத்தையும் பெறலாம். மற்றும் ரூ.749க்கு 60% வரை கேஷ்பேக் பெறலாம். ஜியோ பயனர்கள் 6 மாதங்களுக்கு 10 OTT செயலிகளையும் பெறுவார்கள். வி-ஷீல்டு பாதுகாப்பில் 40% வரை தள்ளுபடியும் பெறலாம்.

மேலும் படிக்க | BSNL வேண்டாம்.. அட நம்ம பக்கம் வாங்க! கஸ்டமர்களை இழுக்க ஜியோவின் பலே பிளான் - என்ன தெரியுமா?

Vivo X200 series:விவரக்குறிப்புகள்

Vivo X200

Vivo X200 ஆனது 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான மற்றும் வண்ணமயமான டிஸ்ப்ளேவாக உள்ளது. இதில் 5800mAh பேட்டரி உள்ளது, இது மிக வேகமாக சார்ஜ் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் வருகிறது - பச்சை மற்றும் கருப்பு. இந்த போனில் 3 கேமராக்கள் உள்ளன. இவை நேர்த்தியான படங்களை எடுக்க உதவுகின்றன.

Vivo X200 Pro

Vivo X200 Pro ஆனது 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆனால் இது இன்னும் சில நல்ல அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த போன் சாம்பல் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். Vivo X200 Pro ஒரு பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மிக வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது. இரண்டு போன்களிலும் MediaTek Dimensity 9400 சிப்செட் உள்ளது. இது மிகவும் வேகமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை எகிற வைக்க... சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News