Flipkart Big Saving Days Sale: டிசம்பர் 16 முதல் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தொடங்க உள்ளது. எனினும், அதற்கு ஒரு நாள் முன்னதாக பல ஸ்மார்ட்போன்களில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் பம்பர் தள்ளுபடியில் கிடைக்கின்றன. ஐபோன் 14 சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால், இந்த தொலைபேசியில் பெரும் தள்ளுபடியைப் பெறுவது மிகவும் கடினம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், பல ஈ-காமர்ஸ் வலைத்தளங்களின் விற்பனையில், இந்த தொலைபேசி பெரும் தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் சேல் இல்லாமலேயே பிளிப்கார்ட்டில் சுமார் 26 ஆயிரம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என இந்த பதிவில் காணலாம். 


iPhone 14: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


iPhone 14 இன் அறிமுக விலை ரூ.79,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இது ரூ.78,740க்கு கிடைக்கிறது. போனுக்கு 1 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறைக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ரூ.5000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் 


iPhone 14: வங்கி சலுகைகள்


வாடிக்கையாளர்கள் ஐபோன் 14-ஐ வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.3,937 கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.74,803 ஆகக் குறையும். இதைத் தவிர இதில் ஒரு பரிமாற்ற சலுகையும், அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. 


iPhone 14 எக்ஸ்சேஞ்ச் சலுகை


ஐபோன் 14 இல் ரூ.20,500 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இந்த தள்ளுபடி கிடைக்கும். எனினும், இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், பழைய போனின் நிலை நன்றாக இருப்பதையும், போன் லேட்டஸ்ட் மாடல் போனாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.20,500 முழுத் தள்ளுபடி கிடைக்கும். 


இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அனைத்து சகுகைகளையும் முழுமையாக பெற முடிந்தால், போனின் விலை ரூ.54,303 ஆக குறைந்துவிடும். 


மேலும் படிக்க | Flipkart Big Saving Days: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ