ரூ.5000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

Best Smartphone Under 5000: அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.5000க்கு குறைவான விலையில் சிறந்த மலிவான ஸ்மார்ட்போன் வாங்கலாம். உங்களுக்காக சிறந்த டாப்-5 ஸ்மார்ட்போன்கள் குறித்து பட்டியலிட்டு உள்ளோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 14, 2022, 09:08 PM IST
  • அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5000க்கு குறைவான விலையில் ஸ்மார்ட்போன்.
  • ரூ.5,000 விலைக்கும் குறைவான டாப்-5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.
  • வாட்ஸ்அப், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் வசதிகள் உள்ளன.
ரூ.5000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் title=

Cheapest Smartphone In India: பல விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இன்றும் பலர் ரூ.10,000, ரூ.15,000 செலவழித்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. அதற்கு அவர்களின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம். அவர்களை பொறுத்த வரை குறைந்தது ரூ.5,000க்கும் குறைவான விலையில் நல்ல போன்கள் கிடைத்தால், அவர்கள் வாங்கக்கூடும். நல்ல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை உங்களுக்கான பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கென்று ரூ.5,000 விலைக்கும் குறைவான சிறந்த டாப்-5 ஸ்மார்ட்போன்கள் குறித்து பட்டியலிட்டு உள்ளோம்.

சாம்சங், ஜியோ, ஐடெல், ஐகால், மோட்டோரோலா போன்ற பிராண்டுகளிலிருந்து 5,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போன்களில் வாட்ஸ்அப்பை இயக்குவது, சமூக ஊடகங்களை பயன்படுத்துவது போன்ற வசதிகளும் உள்ளது. 

மேலும் படிக்க: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

Jio Phone Next
ரிலையன்ஸ் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் பல அம்சங்களை கொண்ட மிகக் குறைந்த விலை போன் ஆகும். 2ஜிபி ரேம் கொண்ட இந்த போனின் விலை இந்தியாவில் ரூ. 5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த போனை ரூ.4,499க்கு வாங்கலாம். 32ஜிபி உள் சேமிப்பு தவிர, 5.45 இன்ச் டிஸ்ப்ளே, 13எம்பி பிரைமரி மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

Itel A23 Pro
ஐடெல் ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.4,999 விலையில் கிடைக்கிறது. ஆனால் அமேசானில் இருந்து ரூ.3,899க்கு வாங்கலாம். இதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், தொலைபேசியில் 5 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம் மற்றும் 2,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஐடெல்லின் இந்த போன் ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வருகிறது என்பது சிறப்பு.

மேலும் படிக்க: இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 349, முந்துங்கள்!!

Itel A25
ரூ.5,000க்கும் குறைவான விலை பட்டியலில் உள்ள இந்த இரண்டாவது ஐடெல் போன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.5,078-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆனால் சலுகைகளுடன் இதை எளிதாக ரூ.5,000க்கு குறைவாக வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே தவிர, 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2எம்பி முன் கேமரா உள்ளது. இந்த போனில் 3,020mAh பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. 

IKALL Z2
அமேசான் தளத்தில், ஐகால் நிறுவனத்தின் இசட்2 வரிசை போன் 4,749 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஆனால் இதன் அசல் விலை ரூபாய் 6,499 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனில் 8எம்பி பின்பக்க மற்றும் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 6 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் 3ஜிபி ரேம் உடன் 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 'மேட் இன் இந்தியா' என்பதுதான் இதன் சிறப்பு.

மேலும் படிக்க: 5G மொபைல் திடீர் விலை குறைப்பு! சாம்சங்க் போட்ட மாஸ் ஸ்கெட்சில் சிக்கிய நிறுவனங்கள்

MarQ M3
MarQ நிறுவனத்தின் 4ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.5,999 பட்டியலிடப்பட்டு உள்ளது. இருப்பினும் வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் ரூ.5,000க்கும் குறைவாக வாங்கலாம். இந்த போன் 2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6.08 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஆகிய வசதிகளை கொண்டது. போனில் 5,000mAh பேட்டரியுடன் பின்புறம் 13எம்பி இரட்டை கேமரா மற்றும் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News