Flipkart The Grand Gadget Days: பிளிப்கார்டில் தி கிராண்ட் கேட்ஜட் சேல் (The Grand Gadget Days Sale) நடந்து வருகிறது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள், கேட்ஜெட்களில் பெரும் தள்ளுபடியைப் பெற நல்ல வாய்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அட்டகாசமான விற்பனையில், மடிக்கணினிகள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பல பொருட்களை மிக மலிவாக வாங்கலாம். குறிப்பாக, இந்த சேலில் லேப்டாப்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். 


நீங்களும் குறைந்த பட்ஜெட்டில் புதிய லேப்டாப்பை (Laptop) வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஹெச்பியின் லேப்டாப்பை (HP Ryzen 3 Dual Core 3250U Laptop) 26 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் இப்போது வாங்க முடியும். இவ்வளவு பெரிய தள்ளுபடியை இந்த சேலில் எப்படி பெறுவது என இங்கே காணலாம். 


ALSO READ | Amazon Bumper Offer; வெறும் 5 ஆயிருக்கு Vivoவின் 5G ஸ்மார்ட்போன்


HP Ryzen 3 Dual Core 3250U லேப்டாப்: சலுகைகள் மற்றும் தொழில்நுட்பம்


HP Ryzen 3 Dual Core 3250U 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் அறிமுக விலை ரூ.46,055 ஆகும். ஆனால் இந்த லேப்டாப்பை இந்த சேலில் ரூ.38,990-க்கு வாங்கலாம். எனினும், இதை விட மலிவான விலையிலும் இந்த லேப்டாப்பை வாங்க முடியும். இதில் வழங்கப்படும் வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டீல்களை பயன்படுத்தினால், வாடிக்கையளர்கள் இந்த லேப்டாப்பை வெறும் ரூ.19 ஆயிரத்திற்கு வாங்க முடியும். 


HP Ryzen 3 Dual Core 3250U லேப்டாப்: வங்கி சலுகைகள் 


HP Ryzen 3 Dual Core 3250U ஐ வாங்குவதற்கு PNB டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது, லேப்டாப்பின் விலை ரூ.37,490 ஆக குறைந்து விடும். இதோடு மட்டுமல்லாமல், இதில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


HP Ryzen 3 Dual Core 3250U லேப்டாப்: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


HP Ryzen 3 Dual Core 3250U இல் ரூ.18,100 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய லேப்டாப்பை பரிமாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை நீங்கள் பெறலாம். எனினும், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்திக்கொள்ள, உங்களது பழைய லேப்டாப் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும் அது சமீபத்திய மாடல் லேப்டாப்பாகவும் இருக்க வேண்டும். 


இந்த அனைத்து தள்ளுபடிகளையும் நீங்கள் பெற முடிந்தால், இந்த அட்டகாசமான லேப்டாப்பை பிளிப்கார்டை (Flipkart) நீங்கள் வெறும் ரூ.19,390-க்கு வாங்கி மகிழலாம். 


ALSO READ | Flipkart Big saving days விற்பனையின் கடைசி நாள், எதில் எவ்வளவு தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR