Flipkart Diwali Sale: இந்தியாவில் அனைவரும் தீபாவளிக்கான ஏற்பாடுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனர். மக்களின் ஷாப்பிங் ஆர்வத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், பல ஆன்லைன் ஈ-காமர்ஸ் தளங்கள் பல வித சலுகைகளை வழங்கி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், பிளிப்கார்ட்டில் (Flipkart) மிகப்பெரிய தீபாவளி விற்பனை நடந்து வருகிறது. விற்பனை முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. பொதுவாக, சேல் முடிவடையும்  தருவாயில், விலையுயர்ந்த பொருட்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் தவிர, ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற தயாரிப்புகளும் விற்பனையில் உள்ளன.


5G ஸ்மார்ட்போன்களும் இந்த சேலில் மிக அதிகமாக விற்பனையாகின்றன. ஏனெனில் நிறுவனம் இதில் தொடர்ந்து பல சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்களும் 5ஜி போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக இருக்கும்.


ALSO READ: Flipkart Diwali Sale: வெறும் ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு 


இந்த சேலில், POCO இன் ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கலாம். நீங்கள் இதில் கிடைக்கும் பல சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், POCO M3 Pro 5G-ஐ ரூ.549க்கு வாங்க முடியும். இவ்வளவு குறைவான விலைக்கு இந்த லேட்டஸ்ட் போனை எவ்வாறு வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.


POCO M3 Pro 5G: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


Flipkart தீபாவளி விற்பனையில், POCO M3 Pro 5G-க்கு ரூ.1500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.15,999 விலை கொண்ட போனை இந்த சேலில் ரூ.14,499-க்கு வாங்கலாம். ஆனால் இதைத் தவிரவும் இதில் பல சலுகைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் இன்னும் மலிவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்,


POCO M3 Pro 5G இல் பரிமாற்றச் சலுகை


POCO M3 Pro 5G இல் ரூ.13,950 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஃபோனை பரிமாற்றிக் கொண்டால், அதிக அளவிலான தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம். ஆனால் உங்கள் தொலைபேசியின் நிலை நன்றாக இருக்க வேண்டும் மற்றும் அது சமீபத்திய மாடல் போனாக இருக்க வேண்டும். இந்த போனில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், POCO M3 Pro 5G ஃபோனை வெறும் 549 ரூபாய்க்கு வாங்கலாம்.


POCO M3 Pro 5G இல் வங்கி சலுகைகள்


உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது இதன்மூலம் வெறும் ரூ.10,199-க்கு இந்த போனை வாங்க முடியும்.


ALSO READ: Flipkart Big Diwali Sale: இந்த விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு பம்பர் தள்ளுபடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR