Flipkart-ல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: பழைய போன், டிவி, ஃப்ரிட்ஜ் விற்று சம்பாதியுங்கள்
Flipkart Exchange Program: பிளிப்கார்டில் உங்கள் பழைய பொருட்களை மாற்றுவதன் மூலம் புதிய பொருட்களை வாங்கலாம். இருப்பினும், செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை நிறுவனம் தான் முடிவு செய்யும். அதேநேரத்தில் உங்கள் பொருளுக்கான மதிப்பில் கூடுதல் பணம் செலுத்தி பழைய பொருளுக்குப் பதிலாக புதிய பொருள் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
பிளிப்கார்ட் நிறுவனம் வீட்டில் இருக்கும் உங்கள் பழைய பொருட்களை விற்பதற்கான சூப்பர் ஆபரை அறிவித்துள்ளது. இதில் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய எலக்ட்ரானிக் பொருள்களை விற்று அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருள்களை குறைந்த விலையில் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். இருப்பினும், செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை பிளிப்கார்ட் நிறுவனம் தான் முடிவு செய்யும். அப்போது நீங்கள் உங்கள் பொருளுக்கு கிடைத்திருக்கும் மதிப்பை பொறுத்து கூடுதல் விலை கொடுத்து புதிய பொருள் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
மேலும் படிக்க | Amazon Sale 2023: 1.5 டன் ஏசிக்கு 48 சதவீதம் சலுகை! உடனே முந்துங்கள்!
பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Flipkart-ன் பரிமாற்ற திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படும். இதில் பைபேக் சலுகைகள் மற்றும் அப்கிரேடு சலுகைகள் இருக்கும். இந்த திட்டத்தில், Flipkart உங்கள் வீட்டிலிருந்து பயன்படுத்திய பொருட்களை எடுத்துக்கொண்டு, அந்த பொருட்களுக்கு ஈடாக நீங்கள் புதிய பொருட்களை வாங்கினால், புதிய பொருட்கள் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.
விலை எப்படி தீர்மானிக்கப்படும்?
Flipkart- ல் ஏற்கனவே பொருட்கள் எக்ஸ்சேஞ்சில் வாங்கியவர்களுக்கு தெரியும் அதன் ரூல்ஸ். சில விதிமுறைகள் அடிப்படையில் பொருட்களின் விலை தீர்மானிக்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு தான் பிளிப்கார்ட் பொதுவாக அதிகமாக எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை கொடுக்கும். இப்போது இந்த திட்டத்தில் கூடுதலாக வாஷிங் மெஷின், லேப்டாப், டிவிக்களையும் சேர்த்துள்ளது. ஸ்கிராப் செய்யப்பட்ட பொருட்களையும் நீங்கள் பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் விற்பனை செய்யலாம். ஆனால், பயன்படுத்திய பொருளின் மதிப்பு அதன் தற்போதைய நிலை மற்றும் வயதைப் பொறுத்தது.
மேலும் படிக்க | 2023 இறுதியில் அறிமுகம் ஆகிறது OnePlus 12: கசிந்த விவரங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ