மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும். இ-காமர்ஸ் தளம் விலையை குறைத்துள்ள நிலையில், வங்கிச் சலுகைகளையும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகள் மூலம் மலிவு விலையில் வாங்கி சேமிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி விலை மற்றும் சலுகைகள்


மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜியின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகம் கொண்ட மாடல் விலை ரூ.31,999. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த போன் ரூ.35,999க்கு (12ஜிபி ரேம்/256ஜிபி மாறுபாடு) அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி சலுகைகளில், ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.3,500 தள்ளுபடியைப் பெறலாம். அதன் பிறகு இந்த போன் அதன் அறிமுக விலையை விட ரூ.7500 குறைந்த விலையில் அதாவது ரூ.28,499 என்ற விலையில் கிடைக்கும். 


எக்ஸ்சேஞ்ச் சலுகை விபரம்


எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் அதிகபட்சம் ரூ.20,150 பெறலாம். இருப்பினும், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், உங்கள் எக்ஸ்சேஞ் செய்ய நினைக்கும் போனின் நிலையை பொறுத்தது.


மேலும் படிக்க | 84 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா இலவசம்! BSNL-ன் அசத்தல் திட்டம்!


மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் சிறப்பு அம்சங்கள்


Motorola Edge 50 Pro போன் 6.7-இன்ச் 1.5K pOLED வளைந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 7 Gen 3 செயலி உள்ளது. இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. மோட்டோரோலாவின் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் வேலை செய்கிறது. 


கேமிரா


கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், போனின் பின்புறம் OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 


பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்


ஃபோனில் 4,500mAh பேட்டரி உள்ளது. இது 125W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற அம்சங்களில் டால்பி அட்மோஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் IP68 மதிப்பீடு ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்களின் முக்கிய எதிர்பார்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ