BSNL Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL நிறுவனம் மாறியுள்ளது. பல மக்கள் தற்போது BSNL பக்கம் படையெடுத்து வருகின்றனர்.
மாதம் மாதம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்கள் விலையை உயர்த்துவதால் மக்கள் பிஎஸ்என்எல் சிம்க்கு மாறி வருகின்றனர். BSNLம் பல ஆபர்களை வழங்குகிறது.
BSNL 599 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 3 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம்.
BSNL 345 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உடன், தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
BSNL 319 க்கு 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதில் 300 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி டேட்டாவை பயனர்கள் பெற முடியும்.
BSNL 87 ரூபாய்க்கு 14 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறைத்த பயன்பாடு கொண்ட மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.