தவறான நடத்தை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து ஃபிளிப் கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் CEO பின்னி பன்சால் ராஜினாமா.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக ஃபிளிப்கார்ட் குழு தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், அந்த நிறுவனம் தொடங்கியதில் இருந்து முக்கிய இடம் வகித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அவர் மீதான திசைதிருப்பலை எற்படுத்தி வருகிறது. இதனால் பின்னி பன்சால் ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம் பின்னி பன்சால் மீது தவறான நடத்தை தொடர்பாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த குற்றசாட்டை பின்னி பன்சால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த புகாரில் பேரில் மேற்கொண்ட விசாரணையில், எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதனால், பின்னி மீதான புகார்களை படுத்தமுடியவில்லை. ஆனால் இது அவர் மீதான மற்ற குறைபாடுகளை இது வெளிபடுத்தியதாக அதில் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிளிப் கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் CEO பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பன்சாலுக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் செயல்பாடுகளுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, இனி ஆடை விற்பனை வலைத்தளங்களான மைந்த்ரா (Myntra) மற்றும் ஜபாங் (Jabong) உள்ளிட்ட இணைய வியாபாரப் பிரிவுகளுக்கான தலைமை நிர்வாகியாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.