பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை (Flipkart Electronics Sale) நடந்து வருகிறது. இந்த விற்பனை இன்று அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்டின் இந்த சேலில், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்து, உங்களிடம் 4ஜி ஸ்மார்ட்போன் இருந்து, 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், இந்த விற்பனை அதற்கு சரியான நேரமாகும். 5ஜி ஃபோன்களை இந்த சேலில் மிக மலிவாக வாங்கலாம். 


15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் சியோமி 11ஐ (Xiaomi 11i) ஹைப்பர்சார்ஜ் 5ஜி போனை 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த விற்பனையில் வாங்க முடியும். அதற்கான வழிமுறையை இந்த பதிவில் காணலாம். 


பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


சியோமி ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ரூ. 31,999 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.26,999க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி 


இது தவிர, இந்த சேலில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது.  இதன் காரணமாக போனின் விலை கணிசமாக குறையும்.


பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி வங்கி சலுகை


சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி-ஐ வாங்க, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். இதன் காரணமாக போனின் விலை ரூ.26,249 ஆக குறையும். இதற்குப் பிறகு இந்த சேலில் ஒரு பரிமாற்ற சலுகை அதாவது ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. 


பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை


சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி-இல் ரூ.17 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த தள்ளுபடியை பெற முடியும். எனினும் இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்களின் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதும் முக்கியமாகும். அப்போதுதான் ரூ.17 ஆயிரம் தள்ளுபடியை பெற முடியும். அனைத்து தள்ளுபடிகளையும் முழுமையாக பெற்றால், இந்த அசத்தலான போனின் விலை ரூ.9,249 ஆக குறையும். 


மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; 32 Inch ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிரடி தள்ளுபடி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR