Flipkart Year End Sale 2022: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், சந்தையில் மிகவும் பிரபலமான சில ஸ்மார்ட்போன்களில் நம்பமுடியாத தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 மூலம் வாடிக்கையாளர்கள் பல வித பொருட்களில் பல சலுகைகளை பெற முடியும். புதிய போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் உள்ளீற்களா? அப்படியென்றால், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். புதிய, புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய போனை வாங்குவதற்கான உங்கள் ஆசை இங்கு எளிதில் நிறைவேறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 விற்பனையில் சில சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், மிகவும் விலையுயர்ந்த போன்களையும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த மகத்தான தள்ளுபடிகளை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். சுமார் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் இந்த போன்களை பெற முடியும் என்பதால், இவற்றைப் பெற வாடிக்கையாளர்கள் அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை.


பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022-ல் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றிய விவரம் இதோ: 


ஐபோன் 11


ஆப்பிள் ஐபோன் 11 ஐ வாங்க விரும்புவோருக்கு இப்போது ஜாக்பாட் அடித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் வெறும் 38,999 ரூபாய்க்கு இதை வாங்க முடியும். இதில் சுமார் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். கூடுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 5 சதவிகிதம் கேஷ்பேக் தள்ளுபடிக்கும் தகுதியுடையவர்களாவார்கள்.


மேலும் படிக்க | ஜியோ 5ஜி Vs ஏர்டெல் 5ஜி! எந்த நெட்வொர்க் சிறந்தது! 


ஆப்பிள் ஐபோன் 13


பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022-ல் ஆப்பிள் ஐபோன் 13-ல் சுமார் ரூ.7,900 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஃபோனின் உண்மையான விலை ரூ.69,900 ஆகும். இது தற்போது ரூ.61,999-க்கு கிடைக்கிறது. கூடுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டைப் பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்.


இன்பினிக்ஸ் நோட் 12


பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022-ல், இந்த போனை வெறும் ரூ.9,999-க்கு வாங்க முடியும். 


போட் ஏர்பாட்ஸ் (boAt Airdopes)


தற்போது நடைபெற்று வரும் பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 விற்பனையில், போட் ஏர்டோப்ஸை வெறும் ரூ.1,299-க்கு வாங்கலாம். இதன் ஆரம்ப அசல் விலை 2,990 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


சாம்சங் வாட்ச் 4 (Samsung Watch 4)


சாம்சங் வாட்ச் 4 -இன் உண்மையான விலை ரூபாய் 29,999 ஆகும். பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022-ல் கிடைக்கும் 62 சதவீத தள்ளுபடிக்கு பிறகு இந்த வாட்சை வெறும் 11,349 ரூபாய்க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | ரெட்மீ ஸ்மார்ட் வாட்சில் இத்தனை அம்சங்களா? ஸ்மார்போனே வேண்டாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ