Samsung Galaxy M04: வெறும் ரூ.9,499-க்கு கிடைக்கும் ஒரு ஸ்டைலான அசத்தல் ஸ்மார்ட்போன்

Samsung Galaxy M04: பயனர்களின் பாதுகாப்பு தேவைகளை மனதில் வைத்து, கேலக்ஸி எம்04 ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது. கேலக்ஸி எம்04 நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு OS மேம்படுத்தல்களுடன் கிடைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 02:22 PM IST
  • மேம்படுத்தப்பட்ட செயல்திறன், மென்மையான மல்டிடாஸ்கிங், தடையற்ற ஆப் நேவிகேஷன் மற்றும் லேக் ஃப்ரீ கேமிங் அனுபவம் ஆகியவை இதில் கிடைக்கும்.
  • Galaxy M04 வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் என்ற இரண்டு நவநாகரீக வண்ணங்களில் வரும்.
  • Samsung.com, Amazon.in மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
Samsung Galaxy M04: வெறும் ரூ.9,499-க்கு கிடைக்கும் ஒரு ஸ்டைலான அசத்தல் ஸ்மார்ட்போன் title=

சாம்சங் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்: சாம்சங்கின் சமீபத்திய M சீரிஸின் கூல் ஸ்மார்ட்ஃபோன், Samsung Galaxy M04, நேற்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இனி இதை வாங்கலாம். பிரபலமான கேலக்ஸி எம் தொடரின் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்டைலான தோற்றம் கொண்டது. மேலும் அதன் வடிவமைப்பும் மிகவும் தனித்துவமானது. நிறுவனம் இதை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், நுழைவு நிலை வரம்பில் வாடிக்கையாளர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி பேசுகையில், Galaxy M04 ஆனது MediaTek Helio P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதனால் 2.3GHz வரை கிளாக் செய்ய முடியும். ரேம் பிளஸ் அம்சத்துடன் 8ஜிபி வரையிலான ரேம் உடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்ட செயல்திறன், மென்மையான மல்டிடாஸ்கிங், தடையற்ற ஆப் நேவிகேஷன் மற்றும் லேக் ஃப்ரீ கேமிங் அனுபவம் ஆகியவை இதில் கிடைக்கும். கேலக்சி எம்04 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் வருகிறது.  

பயனர்களின் பாதுகாப்பு தேவைகளை மனதில் வைத்து, கேலக்ஸி எம்04 ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது. கேலக்ஸி எம்04 நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு OS மேம்படுத்தல்களுடன் கிடைக்கிறது. இது எதிர்கால புதுப்பித்தல்களுக்கு தயாராக இருக்கும் ஸ்மார்ட்போனாக அமைகிறது. Galaxy M04 ஒரு பெரிய 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது போனுக்கு தேவையான முழுமையான பவரை வழங்குகிறது. 

மேலும் படிக்க | ஸ்மார்டா யோசிச்சு ஜியோ பிளான் ரீச்சார்ஜ் பண்ணுங்க! பணத்தை மிச்சப்படுத்துங்க 

Galaxy M04 ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சிறந்த கேப்சருக்காக, Galaxy M04 ஆனது 13MP + 2MP இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. Galaxy M04 ஆனது 5MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இதனால் நல்ல தரமான செல்பிகளை எடுக்க உதவுகிறது.

 மெமரி வேரியண்ட், விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Galaxy M04 ஆனது 4GB+64GB வகைக்கு ரூ.9499க்கும், 4GB+128GB வகைக்கு ரூ.10499க்கும் விற்கப்படுகின்றது. சிறப்பு அறிமுகச் சலுகையாக, அனைத்து SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். 

Galaxy M04 வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் என்ற இரண்டு நவநாகரீக வண்ணங்களில் வரும். நேற்று முதல் Samsung.com, Amazon.in மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை டாப்-5 ஸ்மார்ட்போன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News