பிளிப்கார்ட்டின் "குடியரசு தினவிழா" சிறப்பு விற்பனை இன்று முதல் நடைபெறுகிறது. பிளிப்கார்ட் தொடர்ந்து பல பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த மாதம் 26-ம் தேதி நாட்டின் "குடியரசு தினம்" கொண்டாடப்பட உள்ளது. இதனால் குடியரசு தினம் வருவதையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகை இன்று முதல் தொடங்கி வரும் ஜனவரி 22-ம் தேதி வரை இருக்கும். இந்த "குடியரசு தினவிழா" சிறப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்கள் நீடிக்கும். இதில் மொபைல், தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பொருட்களின் மீது பெரும் தள்ளுபடிகள் மற்றும் கேஸ்பேக் கிடைக்கும். இந்த சலுகை ஃப்ளிப்கார்ட் உறுப்பினர்களுக்கு மூன்று மணி நேரம் முன்னதாக கிடைக்கும்.


ஃப்ளிப்கார்ட்டில் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டில் மூலம் ஷாப்பிங் செய்யும் போது 10% உடனடி தள்ளுபடியை கிடைக்கும் எனவும், டிவி மற்றும் பிற வீட்டு உபகரணங்களுக்கு 75% தள்ளுபடி மற்றும் மின்னணு பொருட்களை 80% தள்ளுபடி வரை கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.


ஸ்மார்ட்போன்கள், டி.வி.க்கள், மடிக்கணினிகள் வாங்கும் போது நீங்கள் வங்கி மற்றும் கடன் அட்டைகளை மூலம் பண பரிமாற்ற செய்யும் போது, வட்டி அல்லாத EMIகளும் கிடைக்கும். 


மூன்று நாட்கள் சலுகையில் ஒவ்வொரு நாலும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு சலுகையும் கொடுக்கப்படும். அதில் 26 சதவீதம் வரை தனியாக தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ஷாப்பிங் பிரியர் என்றால், நாளை முதல் உங்களுக்கு தேவையானா பொருட்களை வாங்க தயாரா இருங்கள்.