உங்கள் ஸ்மார்ட்போனுக்கான 4 மந்திரங்கள்..! அவசியம் ஏன்?
ஸ்மார்ட்போன்களை பத்திரமாகவும், நீண்ட நாட்களும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இந்த விஷயங்களை மந்திரமாக கடைபிடிக்க வேண்டும்.
அன்றாட வாழ்கையின் அங்கமாகிவிட்ட ஸ்மார்ட்போனை வாங்கும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதில் நீங்கள் தவறிவிட்டால் போனை இழப்பது மட்டுமல்ல நிதி இழப்பும் ஏற்படும். வாங்கிய போனை பத்திரமாக வைத்திருக்க சில வழிமுறைகள் உள்ளன. அது என்ன? என்பது தான் இங்கு நீங்கள் நீண்ட நாள் கடைபிடிக்கப்போகும் ஸ்மார்ட்போன் மந்திரம்.
1. ஸ்கிரீன்
நமக்கு எப்படி முகம் முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போனுக்கு முக்கியமானது ஸ்கிரீன். அதில் சிறிதளவு கீறல் விழுந்தால் கூட, அந்த போனை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். அதனால், உங்களுடைய போனுக்கு, வாங்கிய உடனே டெம்பர் கிளாஸ் ஒட்டி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கீழே விழுந்தால்கூட முதலில் டெம்பர் கிளாஸ் மட்டுமே பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ALSO READ | Electric car வருகையால் புதிய உச்சத்தை தொடப்போகும் துறை...!
2. அப்டேட்
நீங்கள் தரமான நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்கி உபயோகிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனம் கொடுக்கும் அப்டேட்டுகளை சரியாக மேற்கொள்ளுங்கள். ஏனென்றால், இணையத்தில் உலாவும் சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்டேட்டுகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல், போனில் இருக்கும் ஆப்களையும் அப்டேடாக வைத்துக்கொள்ளுங்கள். பயன்படுத்தாத செயலிகளை நீக்கிவிடுங்கள்.
3. டவுன்லோடு
ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் ஆப்களை சரியான தளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்டிராய்டு போன் என்றால், கூகுள் ப்ளே ஸ்டோர், ஐபோன் என்றால் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் மட்டுமே ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இவற்றை தவிர்த்து மூன்றாம் தரப்பு வெப்சைட்களில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்தால், அந்த ஆப்களினால் விளையப்போகும் ஆபத்துகளை நீங்கள் எதிர்கொள்ளவும் தயாராகிக்கொள்ள வேண்டும்.
ALSO READ | Flipkart Sale; வெறும் 99 ரூபாய்க்கு Realme இன் இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்
4. நீக்கம்
போனில் தேவையற்ற பைல்கள் வைத்திருப்பதை தவிர்த்துவிடுங்கள். தேவையானதை மட்டும் வைத்திருந்தால் போன் நன்றாக வொர்க் ஆகும். அதிகப்படியான பைல்கள் இருக்கும்போது ஹேங்க் மற்றும் ஸ்லோ புரோசஸ் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். வாட்டர் ப்ரூப் போன் என நீங்கள் வாங்கினாலும், அவை பெரும்பாலும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பு கொடுக்காது. மிக மிக விலையுயர்ந்த போன்களை தவிர மற்ற போன்களை தண்ணீரில் இருந்து தள்ளியே வையுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR