பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக உலகம் எலக்டிரிக் கார்களின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் எலக்டிரிக் கார்களின் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும், அந்த கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
ALSO READ | இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது Micromax In Note 2
இதனால், டெஸ்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு நாடாக எலக்டிரிக் கார் தொழிற்சாலையை நிறுவுகின்றன. டெஸ்லாவைப் பொறுத்தவரை சீனாவிலும் எலக்டிரிக் கார் தொழிற்சாலையை தொடங்கி, விற்பனையிலும் குதித்துவிட்டது. எலக்டிரிக் கார் தயாரிப்பில் சீனாவில் கால்பதித்துள்ள ஒரே பன்னாட்டு நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனம் இந்தியாவிலும் விரைவில் தொழிற்சாலையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் முன்னணி கார் நிறுவனங்களும் எலக்டிரிக் கார் தயாரிப்பில் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனால், கார் தயாரிப்புக்கு தேவைப்படும் அலுமினியம் விலை ஆண்டுக்கு ஆண்டு கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40 விழுக்காடு அலுமினியத்தின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என கணித்துள்ள ஆட்டோமொபைல் துறையினர், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றமாக அது இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அலுமினியத்துடன் சோபோட்கா கோபால்ட்டின் விலையும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | வெறும் ரூ.149க்கு Moto G60 ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் ஆப்பர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR