Jio Fiber அட்டகாசம்: இலவச Netflix, அதி வேக இண்டர்நெட்... இன்னும் பல நன்மைகள்
Jio Fiber: ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன.
இலவச நெட்ஃபிக்ஸ்: ஓடிடி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! நீங்கள் ஜியோ ஃபைபரைப் பயன்படுத்தி, ஓடிடி இயங்குதளங்களின் சந்தாவைத் தனியாகப் பெற்றுக்கொண்டிருந்தால், இப்போது நீங்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன. ஜியோ ஃபைபரின் இது போன்ற சில சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
JioFiber வழங்கும் 1,499 ரூபாய் திட்டம்
JioFiber இன் ரூ. 1,499 திட்டத்தில் 300எம்பிபிஎஸ் வேகத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஏஎல்டிபாலாஜி, ஹோய்சோய், ஷோமாரூமி, லயன்ஸ்கேட் ப்ளே (Netflix, Amazon Prime Video, Disney + Hotstar VIP, SonyLIV, Zee5, Sun NXT, Voot Select, Voot Kids, ALTBalaji, Hoichoi, Shemarumi, Lionsgate Play) போன்ற சேவைகள் உட்பட பல ஓடிடி இயங்குதளங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.
இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல் 30 நாட்களுக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைமுக்கான அணுகலை ஆண்டு முழுவதும் பெறலாம். மேலும் இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச/அன்லிமிடெட் குரல் அழைப்பும் கிடைக்கும்.
மேலும் படிக்க | Nokia Smartphone: 16GB RAM, 8200mAh Battery மாஸாக களமிறங்கும் Nokia Eve 5G!
JioFiber வழங்கும் 2,499 ரூபாய் திட்டம்
JioFiber இன் ரூ. 2,499 திட்டத்தில் 500 எம்பிபிஎஸ் வேகத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஏஎல்டிபாலாஜி, ஹோய்சோய், ஷோமாரூமி, லயன்ஸ்கேட் ப்ளே (Netflix, Amazon Prime Video, Disney + Hotstar VIP, SonyLIV, Zee5, Sun NXT, Voot Select, Voot Kids, ALTBalaji, Hoichoi, Shemarumi, Lionsgate Play) போன்ற சேவைகள் உட்பட பல ஓடிடி இயங்குதளங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும். மேலும் இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச/அன்லிமிடெட் குரல் அழைப்பும் கிடைக்கும்.
JioFiber வழங்கும் 3,499 ரூபாய் திட்டம்
JioFiber வழங்கும் ரூ. 3,499 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1gbps வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான இலவச அணுகலை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டமும் 30 நாட்களுக்கு செல்லுபடி ஆகும்.
JioFiber வழங்கும் 8,499 ரூபாய் திட்டம்
JioFiber வழங்கும் 8,499 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1gbps வேகம் கிடைக்கும். மேலும் 6600 ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கும். இலவச வரம்பற்ற அழைப்புடன், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 30 நாட்களாக இருக்கும்.
மேலும் படிக்க | ஜியோ ஏற்படுத்திய தாக்கம்! ICC, AsiaCup ஹாட்ஸ்டாரில் இலவசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ