இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான்..! OTT-க்கு தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை

நீங்கள் OTT-ல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ரீசார்ஜ் சலுகையின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கலாம். இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2023, 08:21 PM IST
  • ஜியோ நிறுவனத்தின் ஓடிடி பிளான்கள்
  • இலவசமாக நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்
  • உங்களிடம் 699 ரூபாய் இருந்தால் போதும்
இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான்..! OTT-க்கு தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை title=

Netflix மற்றும் Amazon போன்ற தளங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கின்றன. இருப்பினும், நீங்கள் முதலில் இந்த OTT இயங்குதளங்களுக்கு சப்ஸ்கிரைபராக மாற வேண்டும். அதன் பிறகு மட்டுமே அவற்றில் இருக்கும் புதிய மற்றும் உலக தரம் வாய்ந்த படங்களை பார்க்க முடியும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு விரும்பும் வகையில் எல்லா வகையான திரைப்படங்களும் இருக்கும். த்ரில்லர், திகில், காதல் முதல் நாடகம் மற்றும் ஆக்ஷன் போன்ற திரைப்படங்கள் குவிந்து கிடக்கும். இந்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும்போது உங்களின் திரைப்படம் பார்க்கும் ரசனையே மாறிவிடும். 

இவற்றில் உங்களுக்கு பிடித்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், இந்த ஓடிடிக்களில் இருக்கும் படங்களை எல்லாம் நீங்கள் இலவசமாகப் பார்க்க விரும்பினால், அத்தகைய ரீசார்ஜ் திட்டத்தை இங்கே தெரிந்து கொள்வோம். அதில் இந்த நன்மைகள் அனைத்தையும் நீங்கள் இலவசமாகப் பெறுவீர்கள். இதற்காக நீங்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அப்படியான ஜியோவின் ரீச்சார்ஜ் திட்டங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

மேலும் படிக்க | OnePlus Nord CE 3 Lite: இவ்வளவு கம்மி விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனா?

ஜியோ 699 ரூபாய் திட்டம்

நாம் பேசும் திட்டத்தின் விலை 699 ரூபாய். இந்தத் திட்டத்தில், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள். முதலாவதாக, ஜியோவின் இந்தத் திட்டத்தில், அகில இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பின் பலன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. நாட்டில் எங்கும் அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் அதை இணையத்தில் பயன்படுத்தலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், குடும்ப வாடிக்கையாளர்கள் 3 பேர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 

OTT பலன் கிடைக்கும்

ஜியோவின் இந்தத் திட்டத்தின் பலன்களை நீங்கள் குறைவாகக் கண்டால், இந்த மலிவான போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் நிறுவனம் Netflix மற்றும் Amazon Prime சந்தாக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. ஜியோவின் இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பெற விரும்பினால், நீங்கள் போஸ்ட்பெய்டு இணைப்பிற்கு மாற வேண்டும். இது உங்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்த திட்டம் உங்கள் பாக்கெட்டில் சுமையை ஏற்படுத்தாது. ஆனால் இதில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | iPhone 14 விலையில் திடீர் வீழ்ச்சி... பிளிப்கார்ட்டில் அள்ளிச்செல்லும் பயனர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News