Cryopreservation Latest Update : தொழில்நுட்பம் என்னவெல்லாம் செய்யும்? எதிர்காலத்தில் மீண்டும் உயிர் பெறலாம் என்ற நம்பிக்கையில் உடலை பதப்படுத்தி வைக்கும் நிறுவனங்கள் தோன்றவும் வழிவகுக்கும். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ய தயாராக இருந்தால் நீங்களும் உங்கள் உடலை பதப்படுத்தி வைத்து, மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால் கட்டணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேட்பதற்கே வித்தியாசமாக தோன்றுகிறதா? விஞ்ஞான அடிப்படையிலான புனைகதைத் திரைப்படங்களில், கிரையோஸ்லீப் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் உணவு அல்லது பிற வளங்கள் எதுவுமே தேவையில்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நீண்ட காலத்திற்கு "தூங்குவது" அல்லது "உறக்கநிலையில்" இருப்பது ஆகும்.


அதைப் போன்ற ஒரு நிலை அல்ல இது. இறந்த ஒருவர் எதிர்காலத்தில் உயிர் பிழைத்தால் அவருக்கு உடல் தேவைப்படும் அல்லவா? அதற்காக பாதுகாத்து வைக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சில நிறுவனங்கள் இயங்குகின்றன. அறிவியல் முன்னேற்றங்களின் பலனாக ஒரு காலத்தில் மரணமில்லா வாழ்வு என்பது சாத்தியமாகுமா என்பது தெரியாவிட்டாலும், உயிர் பிழைக்க வைக்கும் தொழில்நுட்பம் சாத்தியமானால், இறந்தவரின் உடல் வேண்டும் அல்லவா? இந்த தொழில்நுட்பத்தின் அடிபப்டையில், கோடீஸ்வரர்கள் பலரும் தங்கள் உடலை க்ரிப்டோப்ரிசவேஷன் (Cryopreservation) செய்து பதப்படுத்தி வருகின்றனர். 


உயிர் பிழைக்க வைக்கும் தொழில்நுட்பம் சாத்தியமாகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரியதாக இருக்கலாம். புத்தகங்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பார்க்கும் கற்பனை விஷயமாக இருக்கலாம். இருந்தாலும், அப்படி ஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை பயன்படுத்தி மீண்டும் உயிர்த்தெழுவதற்காக உலகளவில் 500 பேர் ஏற்கனவே தங்கள் உடலை பதப்படுத்தி பாதுகாத்துள்ளனர் என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அரிசோனாவை தளமாகக் கொண்ட கிரையோனிக்ஸ் நிறுவனமான Alcor Life Extension Foundation 230 பேரை இந்தத் திட்டத்தின் கீழ் பதப்படுத்தியுள்ளது. இதில் மொத்தம் 1,400 பேர் பதிவு செய்துள்ளனர்.  


மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!


கிரைபோபிரிசவேஷன் (Cryopreservation) செயல்முறை
மனித உடலை உறைய வைக்கும் செயல்முறை விட்ரிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு நபரின் இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, அதில் கிரையோப்ரோடெக்டண்ட் (cryoprotectant) கரைசலை நிரப்புகின்றனர். இதனால், ஒருவர் இறந்தவுடன் அவரது செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் படிகங்கள் உருவாகும் செயல்முறை நின்றுவிடும்.


இந்த செயல்முறைக்கு பிறகு, இறந்தவரின் சடலம், -196 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டப்பட்டு, பின்னர் திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட வெற்றிட-இன்சுலேடட் உலோகக் கொள்கலனில் பாதுகாக்கப்படும். ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடனடியாக உறைய வைக்கும் செயல்முறையை தொடங்க வேண்டும். ஒரு நபர் இறந்துவிட்டதாக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், உடனே பதப்படுத்தி பாதுகாக்கும் செயல்முறை தொடங்கப்பட வேண்டும்.


பதப்படுத்தப்பட்ட உடல், அதற்கு பின்னர் கிரையோனிக் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். உலகில் உள்ள மொத்தம் மூன்று கிடங்குகளில் 2 அமெரிக்காவிலும் 1 ரஷ்யாவிலும் உள்ளது. எதிர்காலத்தில், விஞ்ஞானத்தின்படி உயிர் பிழைக்க வைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தால், சடலங்களை உயிர்பித்து மீண்டும் மனிதர்களாக உலா வரும் வாய்ப்பு கிடைக்கும்.  


மேலும் படிக்க | ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க  பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்


கிரையோப்ரிசர்வேஷன் கட்டணம்
அல்கோர் நிறுவனம் ஒருவரின் முழு உடலையும் பாதுகாக்க கிட்டத்தட்ட ரூ. 2 கோடி ($220,000) வசூலிக்கிறது. உடல் வேண்டாம், வெறும் மூளையை மட்டும் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் குறைவு தான். கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாய் ($80,000) செலவு செய்தால் நியூரோ க்ரையோபிரிசர்வேஷன் எனப்படும் செயல்பாட்டின் கீழ் உங்கள் மூளையை மட்டும் பாதுகாத்து வைக்கலாம்.  


உயிர்பிப்பதற்கு உத்தரவாதம் 
மனிதர்களின் உடலை மீண்டும் செயலுக்கு கொண்டுவர முடியும் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த திசையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், முதியவர்கள், வயதான காலத்தில் வரும் நோய்களை வெற்றி கொண்டுவிட முடியும் என்பதை மட்டுமே நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.  


மரணத்திற்கு பின் வாழ்வு


எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்தால் நம்மை மீண்டும் உயிர்பித்துக் கொள்ள, ஒருவர் தனது உடலை க்ரையோப்ரெசர்ட் மூலம் பராமரிக்கலாம். ஒருவேளை உடலை பாதுகாக்கு ஒப்பந்தத்தின்படி ஒருவர் உயிருடன் திரும்பிவந்தால், அவர் கட்டிய நிதியை திருப்பிக் கொடுப்பதாக ஒரு நிறுவனம் சொல்கிறது. 


எகிப்திய மம்மி பதப்படுத்தும் முறை


பண்டைய எகிப்து நாகரிகத்தில் இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாக்கும் நுட்பம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பதன் அடிப்படையில் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும். இறந்த சடலங்களை பதப்படுத்தும் எகிப்திய தொழில்நுட்பம் மம்மிஃபிகேஷன் ஆகும்.


மம்மிகளை வைக்க பிரமிடுகள் என்ற மிக விஸ்தாரமான கட்டமைப்புகள், அதில் இருக்கும் சடலத்திற்குத் தேவையான பொருட்கள் என, இறந்தவருக்கு தேவையான பொருட்கள் அனைத்துமே பிரமிடுகளில் வைக்கப்பட்டன. எதிர்காலமும், இறந்தகாலமும் ஏதேனும் ஒரு கட்டத்தில் இணையும் என்பதற்கு இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களே சாட்சியாக இருக்கின்றன.  


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ