ஜியோ முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்!
மக்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திய ஜியோ போன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1500 ரூபாய் வைப்பு இருப்பு தொகையின் அடிப்படையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனினை அறிமுகம் செய்தது. இதற்கனா முன்பதிவு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஜியோ தனது முன்பதிவு வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் "முன் புக்கிங் மீண்டும் தொடங்கும் போது நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம்." என குறிபிட்டுள்ளது.
முன்பதிவு செய்ய தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரிலையன்ஸ் ஜியோவின் வலைத்தளம் தற்காலிகமாக முடங்கி பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.