Flipkart Phone for Free Offer: ஆன்லைன் ஷாப்பிங் மூலம் உங்களுக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடிவதோடு மட்டுமல்லாமல், இந்த ஷாப்பிங் தளங்கள் தினமும் வாடிக்கையாளர்களுக்கு பல அற்புதமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அளிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டில் சலுகைகள் எதுவும் இல்லாத நாள் என்று ஒரு நாளும் இருக்காது என்றுதான் கூற வேண்டும். ஒரு அட்டகாசமான ஃப்ளிப்கார்ட் சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


ஃப்ளிப்கார்ட்டில் (Flipkart) ஆகஸ்ட் 28 இரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31 இரவு 12 மணி வரை Flipkart Phone for Free Offer சலுகை உள்ளது. இந்த சலுகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.


ஃப்ளிப்கார்ட்டின் Flipkart Phone for Free Offer என்றால் என்ன?


Flipkart Phone for Free Offer என்ற இந்த சலுகை, உங்களுக்கு விருப்பமான தொலைபேசியை எந்த செலவும் இல்லாமல் இலவசமாக பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பயன்படுத்த முடியும்.


சலுகை (Flipkart Offer) நாட்களில் ஒரு வாடிக்கையாளர் ஸ்மார்ட்போன் வாங்கி, அவர் இந்த சலுகையைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வாங்கிய ஸ்மார்ட்போனின் முழு தொகையும் ஒரு ஃப்ளிப்கார்ட் பரிசு வவுச்சராக அவருக்கு கிடைத்து விடும். அதாவது அவர் 100% தொகையை கேஷ்பேக்கில் திரும்பப் பெறுவார்.


ALSO READ: Flipkart Big Saving Days sale: இந்த ஸ்மார்ட்போன்களில் பம்பர் ஆப்பர்


வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


இந்த சேல் உள்ள நாட்களில், இந்த சலுகைக்காக தினமும் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் இந்த சேல் நாட்களில் ஃபிளிப்கார்ட்டில் இருந்து ஸ்மார்ட்போனை வாங்கியிருக்க வேண்டும். இந்த 25 அதிர்ஷ்டசாலிகள், அன்றைய நாளின் 1000 வது வாடிக்கையாளர், 2000 வது வாடிகையாளர் என்ற வகையில் சலுகைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த சலுகையின் வெற்றியாளர்கள் பற்றி செப்டம்பர் 14 அன்று பிளிப்கார்ட்டின் மொபைல் கேடக்ரி லேண்டிங் பக்கத்தில் அறிவிக்கப்படும்


இந்த வெற்றியாளர்கள் அக்டோபர் 25-க்குள் அவர்கள் வாங்கிய ஸ்மார்ட்போனின் (Smartphone) முழு மதிப்புக்கு சமமான ஃப்ளிப்கார்ட் மின்னணு பரிசு வவுச்சரைப் பெறுவார்கள்.


சிலரால் இந்த சலுகையை பெற முடியாது


நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலோ, அல்லது சரியான பிளிப்கார்ட் கணக்கு இல்லையென்றாலோ, இந்த சலுகையில் நீங்கள் பங்கேற்க முடியாது. மேலும், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கினால், நீங்கள் முதலில் வாங்கும் போன் மட்டுமே இந்த சலுகைக்கு கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இந்த சலுகையைப் பெற, நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன் உங்களுக்கு டெலிவர் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த சலுகையில் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள் பரிசீலிக்கப்படாது.


ALSO READ: Best Smartphones: ரூ .8,000 க்கும் குறைவான விலையில் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR