நாடு முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு குறைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், குற்றங்களை அதிகளவில் குறைக்கும் வகையிலும், மதுரை காவல்துறை மதுரை காவலன் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கண்காணிக்க முடியும், குற்றங்கள் குறித்து எளிதில் புகார் அளிக்க ஏதுவாகவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரையில் நடைபெற்ற இந்த செயலில் அறிமுக விழாவில் மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த செயலியை அறிமுகப்படுத்தினர்.