Drone Medicine Delivery India: தொழில்நுட்பம் நமது வாழ்வில் பல உதவிகளை செய்து வருகின்றது. தற்போது இதில் மற்றொரு அம்சமும் சேர்ந்துள்ளது. இனி மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரோன்கள் (Drone) மூலம் மருந்துகளை விநியோகிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை செயல்முறை ஜூன் 18 முதல் பெங்களூருவில் தொடங்க உள்ளது. அனுமதிக்கப்பட்ட ட்ரோன்கள் beyond the Visual Line of Sight (BVLOS) ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ட்ரோனுக்கான சோதனை நடக்கும் இடம் பெங்களூருவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


ஜூன் 18 முதல் ட்ரோன் டெலிவரி சோதனை


ட்ரோன்கள் மூலம் மருந்து சேவை செய்யும் இந்த வழிமுறை முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனா தொற்றுநோய் (Corona Pandemic) காரணமாக அது தாமதமானது. இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பெங்களூருவின் த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (TAS) நிறுவனமும் ஒன்றாகும். இது மார்ச் 2020 இல் DGCA-விடம் ஒப்புதல் பெற்றது. TAS இதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளது.


ஜூன் 18 முதல் பெங்களூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கவுரிபிதனூரில் சோதனையைத் தொடங்கும், இந்த சோதனை 30-45 நாட்கள் நீடிக்கும். சோதனைக்கான ஒப்புதலை மார்ச் 20, 2020 அன்றே டி.ஜி.சி.ஏவிடம் பெற்றுவிட்டதாக த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக, சில பணிகள் எஞ்சியிருந்தன, அது இப்போது நிறைவடைந்துள்ளது.


ALSO READ:Microsoft News: 2025ம் ஆண்டுக்குள் Windows 10 மூடப்படுவதன் பின்னணி தெரியுமா


கூட்டமைப்பில் பல கூட்டாளர்கள் உள்ளனர்


TAS-ஐத் தவிர, நாராயணா ஹெல்த் இந்த கூட்டமைப்பில் ஒரு பங்காளியாக உள்ளது. இந்த நிறுவனம் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளை வழங்கும். இந்த கூட்டமைப்பில் தொழில்முறை ட்ரோன் பயன்பாடுகளுக்கான விமான போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்புகளில் நிபுணரான இன்வோலி-சுவிஸ்ஸும் பங்கு கொண்டுள்ளது. இது டிரோன்களுக்கான போக்குவரத்து மேலாண்மை முறையை வழங்கும். இது தவிர, ஹனிவெல் ஏரோஸ்பேஸ் இதில் பாதுகாப்பு நிபுணராக பணியாற்றி வருகிறது. இந்த கூட்டமைப்பு இரண்டு வகையான ட்ரோன்களைப் பயன்படுத்தும். இதில் MedCOPTER மற்றும் TAS ஆகியவை அடங்கும். ஆன்-டிமாண்ட் டெலிவரி மென்பொருளுக்கு RANDINT என்று பெயரிடப்பட்டுள்ளது.


ட்ரோன் 1, 2 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும்


TAS-ன் சி.இ.ஓ நாகேந்திரன் கந்தசாமி, "MedCOPTER-ரின் சிறிய வகை டிரோன், 1 கொலோகிராம் எடைகொண்ட பொருட்களை 15 கிலோமீட்டர் வரை எடுத்துச்செல்லும் வல்லமை படைத்தது. 2 கிலோ எடையை 12 கி.மீ வரை எடுத்துச்செல்லும். நாங்கள் இரு டிரோன்களையும் 30-45 நாட்களுக்கு சோதிப்போம். இதன் போது டி.ஜி.சி.ஏ இன் அறிவுறுத்தலின் படி 100 கி.மீ. வரை பயணிக்க வைப்போம். எங்கள் இலக்கு சுமார் 125 மணி நேரம் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும். சோதனைக்குப் பிறகு, பரிசீலனைக்கு இது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்." என்று கூறினார்.


ALSO READ: Google Updates: கூகுள் ஏன் தேடல் வழிமுறைகளைப் புதுப்பிக்கிறது? தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR