சர்வதேச விமானத் தடையை ஏப்ரல் இறுதி வரை DGCA நீட்டிக்கும் காரணம் என்ன?

சர்வதேச விமானங்களுக்கான தடையை இந்திய அரசு 2021 ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை ஏப்ரல் இறுதி வரை தொடரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA)) இன்று (மார்ச் 23, 2021) அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2021, 08:10 PM IST
  • சர்வதேச விமானத் தடை ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது
  • DGCA உத்தரவு
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
சர்வதேச விமானத் தடையை ஏப்ரல் இறுதி வரை DGCA நீட்டிக்கும் காரணம் என்ன?   title=

புதுடெல்லி: சர்வதேச விமானங்களுக்கான தடையை இந்திய அரசு 2021 ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை ஏப்ரல் இறுதி வரை தொடரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA)) இன்று (மார்ச் 23, 2021) அறிவித்துள்ளது.

Bubble Arrangement என்ற ஏற்பாட்டின் கீழ் சரக்கு விமானங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் DGCA வெளியிட்டுள்ள உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்ததையடுத்து, DGCA இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், சர்வதேச விமானங்களின் இயக்கம் பாதிக்கப்படும்.

Also Read | AIADMK மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பால் மரணம்

ஏப்ரல் இறுதிக்குள் வழக்கமான சர்வதேச விமானங்கள் தொடங்கப்படாது என்பதற்கான அறிகுறியாக இந்த தடை நீட்டிப்பு பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு கோடையில் வழக்கமான சர்வதேச விமானங்களைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து அரசாங்கம் ஆலோசித்து வந்த நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் COVID நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால் சர்வதேச போக்குவரத்தில் முடக்கம் அதிகரிக்கும் என்ற அச்சங்களும் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வழக்கமான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை தடை செய்தது. ஏர் இந்தியாவின் வரையறுக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்க அனுமதிக்கப்பட்டன.  

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 24 நாடுகளுடன் இந்தியா குமிழி விமான ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. குமிழி ஒப்பந்தங்கள் என்பது இரு நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்துக்கான தற்காலிக ஏற்பாடுகள் செய்வதை குறிக்கிறது., அவை வழக்கமாக செயல்படும் சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் சிறப்பு ஏற்பாடாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போக்குவரத்து ஒப்பந்தமாகும்.

Also Read | வரி ஏய்ப்பு செய்தார் உதயநிதி ஸ்டாலின்; தேர்தல் ஆணையத்தில் AIADMK புகார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News