BSNL Launch 5G In India: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. முதலில், நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனத்தால் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பல நகரங்களில் தனது 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. இரண்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது 5ஜி சேவை வேண்டும் என்றால், இந்த இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மற்ற நிறுவனங்களின் சேவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை தேவை எனில், அவர்க ஜியோ அல்லது ஏர்டெல் நிறுவனத்திற்கு மாறவேண்டிய சூழல் உள்ளது. இதற்கிடையில், ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், விரைவில் இந்திய டெலிகாம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது 5 ஜி சேவையையும் கொண்டு வரலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆம், ஊடக அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் முக்கியத் தகவல் பகிர்ந்துள்ளார்.


விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை


ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்சியின் போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதை தெரிவித்தார். 


மேலும் படிக்க | ரூ 749 ரீசார்ஜ் திட்டம்..2ஜிபி டேட்டா..அள்ளி வீசும் மாஸ் காட்டும் ஜியோ


BSNL 5G சேவை எப்போது தொடங்கப்படும்


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னவ் இருவரும் ஒடிசாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தனர். அப்பொழுது தொலைத்தொடர்பு அமைச்சர் கூறுகையில், தற்போது நிறுவனம் 4ஜியில் கவனம் செலுத்தி வருகிறது. 5G கொண்டு வர இன்னும் 1 வருடம் ஆகும். பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை ஏப்ரல் 2024ல் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தகவல் அளித்த அவர், 4ஜி சேவை படிப்படியாக 5ஜிக்கு மாற்றப்படும் என்றார். ஆனால் தற்போதைக்கு சிறிது நேரம் எடுக்கும், 


BSNL 4G சேவை எப்போது தொடங்கப்படும்


இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் TCS மற்றும் C-DOT உடன் இணைந்து 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, 2023ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் வேகமான 4ஜி சேவைகளை பிஎஸ்என்எல் தொடங்கும். மேலும் 2024ல் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் இணைய வசதி கிடைக்கும் என்றார்.


மேலும் படிக்க | Amazon Sale 2023: 40% ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!!... அமேசான் அசத்தல் ஆஃபர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ